கால்நடை தகவல்கள் RK

கால்நடை தகவல்கள் RK rabbit farm
(10)

13/08/2023

fancy dress, competition, velu nachiyar, Thanshika, fancy,

22/07/2021

Hf pregnant cow for sale 18 to 20 litres per day milk

24/05/2018

Adult and baby
Rabbits available

17/09/2017

All breed puppy and adult dogs also available

18/03/2016
Today born baby
10/01/2016

Today born baby

26/12/2015
Today born babies
18/11/2015

Today born babies

11 days old bunnies
14/11/2015

11 days old bunnies

5 days old cute bunnies
08/11/2015

5 days old cute bunnies

New born bunny rabbits
05/11/2015

New born bunny rabbits

12/10/2015

முயல் கறியில் உள்ள சத்துக்களையும், அதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பார்ப்போம்.





இன்றைய மாறிவரும் உணவுப் பழக்கங்களாலும், உடல் நோகாமல் வேலை செய்து வருவதாலும், உடலில் உள்ள கலோரிகளானது அதிகமாக செலவாவதில்லை. இருப்பினும் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் 60 வயதில் வரவேண்டிய இரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய்கள் போன்றவை 25 வயதிலேயே தொற்றிக் கொள்கிறது. எனவே பலர் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாக உள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ள விரும்புகின்றனர். அதே சமயம் உடலுக்கு வேண்டிய சத்துக்களையும் பெறும் அளவிலான உணவுகளை நாடுகின்றனர். பொதுவாக அனைத்து சத்துக்களும் வளமாக இருக்கும் ஒரு உணவுப் பொருள் தான் இறைச்சி. சிக்கன் சாப்பிடுவீங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்!!! இத்தகைய இறைச்சியில் பல வெரைட்டிகள் உள்ளன. ஆனால் அனைத்து இறைச்சியிலும் கொழுப்புக்கள் குறைவாக இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் முயல் கறியில் இன்றைய கால தலைமுறையினர் எதிர்பார்க்கும் வகையிலான அத்தியாவசிய சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. இப்போது முயல் கறியில் உள்ள சத்துக்களையும், அதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பார்ப்போம்.



கொலஸ்ட்ரால் குறைவானது மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடுகையில் முயல் கறியில் கொலஸ்ட்ராலானது மிகவும் குறைவாக உள்ளது. எனவே எடையை பராமரிக்க நினைப்போர் முயல் கறியை அச்சமின்றி சாப்பிடலாம்.





உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சோடியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளக்கூடாது. ஆனால் முயல் கறியில் சோடியம் குறைவாக இருப்பதால், இதனை அத்தகையவர்கள் தாராளமாக உட்கொள்ளலாம்.



இதய நோய் மற்ற கறிகளுடன் ஒப்பிடும் போது முயல் கறியில் செரிவான கொழுப்பு அமிலங்கள் குறைவாகவும், இதயத்தை பாதிக்காத கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவும் இருப்பதால், இதய நோய் உள்ளவர்கள் எவ்வித பயமும் இல்லாமல் முயல் கறியை சாப்பிடலாம்.



புரோட்டீன் முயல் கறியில் எளிதில் செரிமானமாகக்கூடிய புரோட்டீன்களைக் கொண்டுள்ளது. இதனால் இதனை உட்கொண்ட பின்னர் எந்த ஒரு இம்சையையும் சந்திக்கமாட்டோம். ஆகவே கடுமையான இரையக குடல் பாதை பிரச்சனை உள்ளவர்களும் இதனை சாப்பிடலாம்.



கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் மற்ற இறைச்சியுடன் ஒப்பிடும் போது முயல் இறைச்சியில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது.





புற்றுநோய் முக்கியமாக புற்றுநோய் உள்ளவர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது, முயல் கறியை சாப்பிட்டு வந்தால், அதனால் ஏற்படும் அபாயத்தை மெதுவாக குறைக்க முடியும்.





சீரான மெட்டபாலிசம் முயல் கறியை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால், உடலின் மெட்டபாலிசமானது சீராக இருக்கும். இதனால் உடலில் கொழுப்புக்களானது தங்குவதைத் தடுக்கலாம்.

முயல் வளர்ப்பு அங்கோரா முயல் வளர்ப்பு அங்கோரா முயல்கள், உரோமத்தின் தரத்திற்காக வளர்க்கப்படுகிறது. அங்கோரா முயல்களில் நிற...
10/10/2015

முயல் வளர்ப்பு
அங்கோரா முயல் வளர்ப்பு
அங்கோரா முயல்கள், உரோமத்தின் தரத்திற்காக வளர்க்கப்படுகிறது. அங்கோரா முயல்களில் நிறைய வகைகள் உள்ளன. முயலின் உடம்பை சுற்றியுள்ள உரோமும், உரோமம் உற்பத்தி செய்யப்படும் சதவீதத்திற்கும் வேறுபாடு உள்ளது. பலதரப்பட்ட முயல்களில், ஜெர்மன் அங்கோரா இனம் சிறந்தது. இது 1000 – 1200 கிராம் அளவு உரோமத்தை நல்ல மேலாண்மை முறையைப் பின்பற்றினால் பெறலாம். முயல்களை எந்த விதமான சூழ்நிலைகளிலும், அதாவது புறக்கடைத் தோட்டம் முதல் பெரிய அளவில் ஒரு தொழிலாகவும் செய்யலாம்.
முயல் வளர்ப்பின் நன்மைகள்

முயல்கள் அதிகளவில் இனவிருத்தி செய்யும் தன்மையுடையது.
பலதரப்பட்ட தீவனங்களை அதிகளவில் உணவாக எடுத்துக் கொள்வதால், சிறிய தொகையை முதலீடு செய்து முயல்களை வளர்க்கலாம்.
ஆரம்ப முதலீடு மிகவும் குறைவு.
மிக விரைவில் லாபம் கிடைக்கப்பெறும். அதாவது முயல் வளர்ப்பு ஆரம்பித்த 6 மாத காலத்திலிருந்தே பெறலாம்.
வருமானம் குறுகிய காலத்திலேயே கிடைக்கப் பெறுவதால், கடனை திருப்பி செலுத்துவதும் எளிதாக உள்ளது.
உரோமம் மட்டுமல்லாமல், எருவிலிருந்தும் வருமானம் கிடைக்கப் பெறுகிறது.
முயல் வளர்ப்பின் முக்கியத்துவம்
மற்ற கால்நடை வளர்ப்பை விட முயல் வளர்ப்பினால் சிறிய முதலீடு செய்து எளிதாக வருமானமும் பெறலாம். முயல்கள் மனிதனுக்கு தேவையான உணவுடன் போட்டியிடுவதில்லை. அதனால் உணவு உற்பத்தி சங்கிலியில் இது அவ்வளவு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. நல்ல தரமான உரோமத்தை உற்பத்தி செய்வதால், மற்ற தரமுடைய உரோமங்களுடன் கலந்து செய்ய வேண்டும். செம்மறியாடுகளிலிருந்து வரும் உரோமம் நல்ல தரமுடைய உரோமம் இல்லை. ஆனால் அங்கோரா முயலின் உரோமம் அதிக தரமுடையது. செம்மறியாட்டின் உரோமம் மற்றும் பட்டுநூலுடன் கலந்து செய்யும் போது, இன்னும் அதிக தரத்தைத் தருகிறது.

வடக்கு குளிர் மண்டல நிலையத்தின் (கர்ஸா,குல்லு என்ற இடத்தில்) மத்திய செம்மறியாடு மற்றும் உரோம ஆராய்ச்சி நிலையத்தின் உதவியுடன் நல்ல தரமடைய முயல் இனங்களை பெற முடிகிறது. மேலும், அங்கே முயல் வளர்ப்பு பற்றி பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இருந்தாலும், அங்கோரா முயல்கள் மலைப் பகுதிகளில் மட்டும் தான் வளர்க்க முடியும். ஆகவே, அங்கோரா முயல் வளர்ப்பு மலைப்பகுதிகளில் உள்ள உழவர்களுக்கு ஒரு பெரிய வருமானம் தரும் தொழிலாக உள்ளது.
முயல் வளர்ப்பிற்குத் தேவையான வளர்ப்பு முறைகள்
இனங்களைத் தேர்வு செய்தல்

பொருளாதார பலன்களை அதிகளவில் பெற தகுந்த இனங்களைத் தேர்வு செய்யவும்.
இனபெருக்கம் செய்யப் பயன்படும் ஆண் மற்றும் பெண் முயல்கள் வெவ்வேறு இனமாகவும், ஒரு வருடத்திற்கு குறைவாகவும், எந்த குறைபாடும் இல்லாதவாறு இருக்க வேண்டும்.
முயல் வளர்க்க ஏற்ற இடம் மற்றும் குடில் தேர்வு செய்தல்

வெப்பநிலை 10-20 ̊ செ. அளவும், ஒப்பு ஈரப்பதம் 55-65% அளவு வருடம் முழுவதும் உள்ள இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
சுத்தமான நீர், மின்சாரம், சாலை வசதி, தீவனங்களை வழங்குதல், தீவனம், உணவு, மருத்துவ உதவி, சந்தை அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிறிய அளவில் உள்ள முயல் பண்ணைகளுக்கு, கூண்டு அமைப்பே போதுமானது.
பெரிய அளவில் வளர்க்கும் முயல் பண்ணைகளுக்கு, ஒன்று (அ) இரண்டு அடுக்குள்ள கூண்டு அமைப்புடைய கூடாரங்கள் தேவை.
ஒவ்வொரு முயலுக்கும் போதுமான இடம் ஒதுக்க வேண்டும்.
முயல் வளர்க்கும் குடிலை அஸ்பெட்டாஸ், மரம், தென்னங்கீற்று கொண்டு கூரை வேய வேண்டும்.
எந்த விதமான இரை தேடுபவை மற்றும் பறவைகள் உள்ளே நுழையாதவாறு கூண்டை அமைக்க வேண்டும்.
கூண்டை நுண்ணுயிர் நீக்கம் செய்து சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
கூண்டை எந்தவித நோய்த் தொற்று ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அடர் தீவனம் உண்ணத் தருவதாக இருந்தால், காலையில் தரவேண்டும். வைக்கோலை மதியம் உண்ணத் தரவேண்டும்.
தண்ணீர் அளித்தல்

பால் தரும் பெண் முயல்களுக்கு அனைத்து நேரங்களிலும் தண்ணீர் பருக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
எப்பொழுதும் சுத்தமான நீரைத் தர வேண்டும்.
எப்பொழுதும் நீர் வைக்கும் கலனில் ஏதும் குப்பை, மண் படியாதவாறு, சுத்தம் செய்து தர வேண்டும்.
இனப்பெருக்க மேலாண்மை

முதல் முறை இனப்பெருக்கம் செய்ய 5-7 மாதங்கள் உடைய முயல்கள் ஏற்றவை.
காலை (அ) மாலை வேலைகளில் இனப்பெருக்கம் செய்யலாம்.
பெண் முயல்களை ஆண் முயல் உள்ள கூண்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
3- 4 முறை இனப்பெருக்கம் செய்யுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
கூண்டில் உள்ள வலைப் பெட்டியில் 25 நாளான கர்ப்பமுடைய முயலை அடைக்க வேண்டும்.
ஒரே இனத்துடன் முயலை இனப்பெருக்கம் செய்ய வைக்கக் கூடாது.
மூன்று வருடங்களுக்குப் பிறகு, நன்கு வளர்ந்த முயல்களை மாற்றி, புதிதாக ஒன்றை வைத்துப் பராமரிக்க வேண்டும்.
இளம் முயல்களை கவனித்தல்

5 வாரமுடைய முயல் குட்டிகளை வலைப் பெட்டியிலிருந்து எடுக்க வேண்டும்.
குட்டிகளை தினமும் ஆய்வு செய்து, நல்லவற்றை பராமரிக்கவும்
குட்டிகளின் படுக்கைகள் ஈரமாக இருந்தால், புதிதாக ஒன்றை மாற்ற வேண்டும்.
5 (அ) 6 வாரம் கழிந்த முயல் குட்டிகளை பால்குடி மறக்கச் செய்ய வேண்டும்.
உண்ணத் தரும் தீவனத்தில் ஏதும் மாற்றம் செய்யக் கூடாது.
நோய் தடுப்பு /கட்டுப்பாடு

முயல் கூண்டுகள், கூடாரங்கள், உபகரணங்கள், உணவு, தண்ணீர் எந்தவிதமான தொற்று இல்லாமல் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.
முயல்கள் அதனுடைய கழிவுகள் மேல் படாதவாறு, உடனடியாக அகற்றி விடவும்.
அதிகளவில் முயல்களை கூண்டில் அடைப்பதையும் தவிர்க்கவும்.
சீரான முறையில் காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்
நோய் தொற்று ஏதும் ஏற்படாதவாறு தடுப்பூசி / மருந்துகள் தரவும்.
நோய் தொற்று ஏற்பட்டு இறந்த முயல்களை எரித்து விடவும்.
வலைப்பெட்டியில் பயன்படுத்திய பின் உள்ள படுக்கையை எரித்து விடவேண்டும்.
உரோமம் எடுத்தல் /விற்பனை செய்தல்

5-6 செ. நீளமுடைய உரோமம் வரும்போது, உரோமம் எடுக்க வேண்டும்.
பால் குடி மறந்த ஒரு வாரத்திற்கு பிறகு உள்ள இளம் முயல்களிலிருந்து உரோமம் எடுக்கலாம். தொடர்ந்து 10-11 வார இடைவெளி விட்டு உரோமம் எடுக்கவும்.
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களின் கடும் குளிர் காலங்களில் உரோமம் எடுப்பதைத் தவிர்க்கவும்.
ஒரு தடவை உரோமத்தை தோலுக்கு அருகில் வரை வெட்டும் போது கவனமாக வெட்டி எடுக்க வேண்டும்.
உரோமம் எடுத்த பின் 15 நாட்களுக்கு, முயல்களை அதிக கவனமாக வைத்துக் கொள்ளவும்.
நல்ல தரமுடைய உரோமத்தை தரம்பிரித்து, சந்தைக்கு அனுப்பவும்.
15 நாட்களில் பிரசவிக்கும் நிலையில் உள்ள பெண் முயல்களிலிருந்து உரோமம் எடுப்பதைத் தவிர்க்கவும்.

Rabbits buy or sell contact me
04/10/2015

Rabbits buy or sell contact me

Baby,adult and pregnant rabbits good quality rabbits available , buy and sell contact me chargeable door delivery available near kumbakonam only. - Animals - Kumbakonam

Rabbits buy or sell contact me
04/10/2015

Rabbits buy or sell contact me

Address

Sivapurani
Kumbakonam
609804

Telephone

8883333436

Website

Alerts

Be the first to know and let us send you an email when கால்நடை தகவல்கள் RK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Kumbakonam pet stores & pet services

Show All