நாய், பூனை, ஆடு, மாடு, தொடங்கி அத்தனை செல்லப் பிராணிகளும் மிகவும் பிடிக்கும்..! செல்லப் பிராணிகளின் விளையாட்டு, குட்டிக்கோபம், செல்லக்கடி இவற்றில் மனம் இளகாதவர்கள் மனிதராக இருக்க முடியாது. செல்லப் பிராணிகள் விளையாட்டுக்கு மட்டும் அல்ல.. உடல் உள ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக உள்ளன.சிறு குழந்தைகள் செல்லப் பிராணியுடன் வளர்வது அவர்களின் தனிப்பட்ட ஆளுமை வளர்ச்சிக்கு உதவும். நாய்க்குட்டியுடன் சே
ர்ந்து விளையாடுவது வீட்டில் உள்ள அனைவருக்குமே குதூகலமான அனுபவம்.வயோதிப காலத்தில் முதியவர்களை சோர்ந்து விடாமல் வைத்திருக்க உதவும் இவை. அவர்கள் தனிமையாக உணர்வதையும் தடுத்து அவர்களின் வாழ்க்கையில் இறுதிவரை ஒரு பிடிப்பை ஏற்படுத்துகின்றன. வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளை விட ஆடுமாடுகள் இவர்களில் வைத்திருக்கும் அன்பு அதிகம்.
உடல் எடை குறைப்பதற்கு ஏன் ஜிம்முக்கு போகவேண்டும்..?
மாலை ஒரு மணி நேரம் ஒதுக்கி நாயோடு ஒடி விளையாடியும் கொஞ்ச தூரம் நடந்தும் கூட செலவுகள் இல்லாமல் உடல் எடை குறைக்கலாம்.இதைவிட செல்லப் பிராணிகள் மன அழத்தத்தை குறைப்பதுடன் உயர் குருதி அழுத்த நோயாளிகளுக்கு குருதி அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவுகிறது. அன்பாக ஒரு பிராணியை வளர்ப்பது மாத்திரையை விட சிறந்த வைத்தியம் என்று கூறப்படுகிறது.இதன்மூலம் தன்னை வளர்பவரின் நீண்ட ஆயுளுக்கு இவை உறுதுணையாக இருப்பது ஆரய்ச்சிகள் மூலம் நிருபணமாகியுள்ளது. இருதய நோயால் பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 92பேரில் மேற்கொள்ளப்பட ஆய்வு ஒன்றில் செல்லப் பிராணிகள் எதுவும் வளர்த்திராத 29 பேரில் 11 பேர் ஒருவருடத்திலேயே இறந்து போக ..செல்லப் பிராணிகள் வளர்த்த 52 பேரில் மூன்று பேர்தான் இறந்திருந்தார்கள்.அத்துடன் ஒரு செல்லப் பிராணியை வளர்ப்பது மார்படைப்பு வருவதற்கான ஆபத்தை இரண்டு சதவீதம் குறைப்பதாக இன்னொரு ஆராய்ச்சியில் சொல்கிறார்கள்.
இப்படி எத்தனையோ அனுகூலங்கள் இருந்தாலும் வெறும் காவலுக்கு மட்டும் நாயும்.. எலி பிடிக்க மட்டும் பூனையும் வளர்க்கும் கூட்டமும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறது. மூன்று நேர சாப்பாட்டுக்கும் படுக்க ஒரு இடத்திற்கும் அவை காட்டும் அன்பு வேறு எங்கும் கிடையாது. நன்றியுள்ள நாய் ஒரு போதும் கடமைக்கு வாலாட்டுவதில்லை !!
உங்களை சந்தோசமாக மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமா வாழ வகை செய்யும் இந்த செல்லப் பிராணிகளை ஆரோக்கியமாக வளர்ப்பது உங்கள் கடமை இல்லையா.!! -நன்றி பாலவாசகன்.