12/08/2025
“ELEPHANT MEN”
Aug 12 – World Elephants Day
நம்மில் பலர் டாக்டர்.கே-வைப் பற்றி "அரம்" புத்தகத்தின் மூலம் மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறோம். அவரைப் பற்றிய கட்டுரைகள் அல்லது வீடியோக்கள் அதிகம் வலைத்தளங்களில் கிடைப்பதில்லை. அந்த நாட்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. மேலும், டாக்டர்.கே தனது சாதனைகளைப் மேற்கோள் காட்ட விரும்பிய ஒரு நபராக அறியப்படவில்லை. அவர் மிகுந்த நேர்மையுடனும் நேர்த்தியுடனும் தனது பணியை தொடர்ந்தார், யானைகளின் நலம் ஒன்றே அவரது மனநிறைவின் ஆதாரம். இந்த உலக யானை தினத்தில், ஹாரி மார்ஷலின் "யானை மனிதர்கள்" ஆவணப்படத்தின் ஒரு சிறு பகுதியை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். டாக்டர்.கே- வின் தனித்துவம் என்ன என்பதை மேலும் அறிய இந்த ஆவணப்படம் ஒரு பொக்கிஷமான ஆதாரமாகும்.
திரு.ஹாரி மார்ஷல் மற்றும் குழுவின ரின் இப்பணி மிகுந்த பாராட்டுதலுக்குரியது. டாக்டர்.கே வை பற்றி அறிய விளையும் வாசகர்களுக்கு ஆகச்சரியந்த பொக்கிஷம் இது யானைகளின் நலனுக்காக அவர் ஆற்றிய அனைத்து அசாதாரண பங்களிப்பிற்கும் இந்த ஆவணப்படம் ஒரு சிறந்த சான்றாகிறது.
திரைப்பட தயாரிப்பாளர் ஹாரி மார்ஷலுடன் நேர்காணல் (https://www.pbs.org/wnet/nature/the-elephant-men-introduction/2312/)
“யானைகள் உலகில், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஒரு சகாப்தம். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வனவிலங்கு வைத்தியராக பணியாற்றிய அவர், இன்றும் அந்தத் துறையின் ஒளிவிளக்காக விளங்குகிறார். இந்தப் படைப்பின் முழு காரணமும் அவரே. வடஇந்தியாவில் கிராமங்களைத் தாக்கிய காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்க்க அழைக்கப்பட்டார். ஏற்கனவே எழுபது வயது கடந்த ஓய்வுபெற்ற ஒருவரிடம் இத்தகைய பணியைச் சொல்லுவது வியத்தகு ஒன்றே; ஆனால் அந்நேரத்தில் அந்தச் சிக்கலை சமாளிக்கக் கூடிய ஒரே மனிதர் அவர்தான்.
பல்கலைக்கழகத்தின் முதலாண்டிலேயே அவர் வனவிலங்கு மருத்துவப் பாதையையே தேர்ந்தெடுத்தார். காடுகளில் தங்கி, மழை, மண், கொசு, மிருகங்களுடன் கலந்த வாழ்க்கையை நேசிப்போர் மிகச் சிலர்; ஆனால் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அதை நீரில் மிதக்கும் வாத்தைப் போல அமைத்து கொண்டார்.
“சிறந்த யானைப் பயிற்சியாளர்கள், மஹாவூத்துகள் பிறப்பிலேயே உருவாகிறவர்கள்” என்பார்கள். அந்தப் பிறப்பிலேயே கிடைக்கும் நுண்ணுணர்வு அவருக்குண்டு. யானைகளுடன் பேசாமல் பேசும் அந்தப் பழக்கம், அந்த நெருக்கம், அவரின் தனிச்சிறப்பு.
இன்று, அவர் சொல்லும் கதைகளை கவனமாகக் கேட்டு, அவரிடம் கற்றுக்கொள்பவர்கள் பலர். அவரின் அனுபவமும் அறிவும், தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பாரம்பரியமாக மாறி நிற்கிறது.
Many of us have heard Dr.K only through the book of “Aram”. Not many articles or videos of him are available online. Technological advancements were least those days and moreover, Dr.K wasn’t known to be a person who wished to register and embark on his laurels and landmarks. He pursued his passion with extreme sincerity and honesty and wellbeing of his elephants were his ultimate source of contentment. This world elephant day, we unveil a short part of the documentary, “Elephant men” by Harry Marshall. This documentary is the only treasured source to know more on what makes Dr.K stand apart. We sincerely thank Mr.Harry Marshall and team for such wonderful work. The documentary stands as a proof of all his extraordinary contribution for welfare of those gentle giants.
Interview with Filmmaker Harry Marshall (https://www.pbs.org/wnet/nature/the-elephant-men-introduction/2312/)
“Dr. Krishnamurthy is something of a legend in elephant circles. He’s been working as a wildlife vet for over 50 years. He was the inspiration for the whole film. He’d been asked to go to North India to solve the problem of rampaging elephants and capture them. It seemed like an extraordinary thing to ask a retired 70-year-old man to do, but it’s because there is a crisis — and he’s the only man who could sort it out.
Dr. K became a wildlife vet as a freshman in university. Not many people enjoy living in the jungle, sleeping rough. He just took to it like a duck to water. They say that great elephant trainers, great mahouts, aren’t made, they’re born. Dr. K has an intuitive touch with elephants. And thanks to him the tradition will continue. He has many disciples who sit at his feet and hear his stories.
In this video, he emotionally recalls his favourite pet "IG - Inspector General"❤️