26/04/2021
சித்திரை திருவிழா...!!!
மதுரை மாநகரையே குலுங்க வைக்கும் விழா, சித்திரை திருவிழா...!!!!!
தமிழகம் மட்டுமின்றி உலகின் பிற பகுதிகளிலும் இவ்விழா பிரபலமடைந்துள்ளது.முழுதாக ஒரு மாதம் எடுத்துக் கொண்டு உலகிலேயே அதிக நாட்கள் கொண்டாடப்படும் பிரமாண்ட பண்டிகை இதுவாகத்தான் இருக்கும்.
மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் இந்த திருவிழாவை மிக விமர்சையாக கொண்டாடுகின்றனர். இப்பெருவிழாவின் முதல் 15 நாட்கள் மீனாட்சி அம்மனுக்கும் அடுத்த 15 நாட்கள் அழகருக்கும் விழா நடைபெறுகிறது.
லட்சகணக்கான பக்தர்கள் திரள நடக்கும் இவ்விழா 400 ஆண்டுகளுக்கு முன்னரே புகழ்பெற்றுள்ளது.அப்போது மீனாட்சி சுந்தரர் திருமணத்தை மட்டுமே கொண்ட இந்த விழா சைவர்களின் முக்கிய பண்டிகையாக கருதப்பட்டது.அன்றைய காலத்தில் சோழவந்தன் எனும் இடத்தில் தான் நடந்தது.பின்னர் திருமலை நாயக்கர் காலத்தில், சைவம் மற்றும் வைணவ சமயங்களை ஒன்று சேர்க்கும் பொருட்டு, திருக்கல்யாணத்தோடு அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா இணைக்கப்பட்டது.
தற்போதையா நவீன வாழ்க்கையில் இவை போன்ற திருவிழா தான் நம் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.இது ஒரு இந்து சமய திருவிழா மட்டுமல்ல சாதி, மதம் அனைத்தையும் கடந்து மதுரை மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய தமிழ் சமூக விழா, பெருமைமிகு சித்திரை திருவிழா ஆகும்.