23/09/2021
வெள்ளை கழிச்சல் நோய்க்கு தீர்வு.
பொதுவாக நாட்டு கோழிகளுக்கு பருவநிலை மாறும் போது "வெள்ளை கழிச்சல் நோய்" ஏற்படுகிறது. இந்த நோயானது ஒரு வித வைரஸின் மூலமாக பரவுகிறது. பனிக்காலத்தில் இருந்து வெயில் காலம் துவங்கும் மாசி மற்றும் கோடை காலத்தில் இருந்து மழை காலம் துவங்கும் ஆனி, ஆடி போன்ற மாதங்களில், தோன்றுவது வழக்கம். இவ்வகை நோய்களை ஆரம்பத்திலே கண்டறிந்து அதற்கான மருந்தை கொடுக்கும் போது கோழியின் இறப்பை தவிர்க்க இயலும். நாட்டுக்கோழி வளர்ப்பில், கோழிகளைத் தாக்கும் நோய்களைத் தடுக்க வருமுன் காப்பதே சிறந்தது. இருப்பினும், நோய் வந்த பிறகு இங்கு நான் குறிப்பிடும் முறையைப் பின்பற்றி எளிதில் குணப்படுத்தலாம்.
வெள்ளை கழிச்சல் நோயின் அறிகுறிகள்
கோழிகள் சோர்ந்து சுறுசுறுப்பின்றி உறங்கிய படியே இருக்கும்.
கோழிகள் உணவாக இறையோ, தண்ணீரோ எடுக்காமல் பலவீனமாக காணப்படும்.
கோழிகளின் எச்சம் வெள்ளை நிறத்திலும், பச்சை நிறத்திலும் அதிக துர்நாற்றதுடன் வெளியேறும்.
கோழிகள் இறகுகள் சிலிர்த்து தலை பகுதி உடலுடன் சேர்த்தே இருக்கும்.
பாதிக்கப்பட்ட கோழிகளை கவனிக்கும் முறை
இந்நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளை முதலில் தனியாக பிரித்து எடுத்து விட வேண்டும், இல்லையெனில் கூண்டில் இருக்கும் அனைத்துக் கோழிகளுக்கும் பரவி விடும்.
கோழிகளின் வசிப்பிடம், கூடு மேலும் தீவனம் மற்றும் நீர் வைக்கக் கூடிய பாத்திரங்கள் சுத்தமின்மையினாலும் , வேற்றுக் கோழிகளுடன் கலப்பதனாலும் இவ்வாறான நோய்கள் பரவுவதற்கு காரணமாக அமைகின்றன.
உடனடி தீர்வுக்கு
நாங்கள் பயன்படுத்தும் முறை.
பாதிக்கப்பட்ட கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு கோழிக்கு ஒன்று என்ற விகிதம் பணடொல் மாத்திரையை எடுத்து தூளாக்கி நீரில் கரைத்து தொடர்ந்து 3 நாட்கள் கோழிகளுக்கு வாய் வழியாக பருக்க வேண்டும்
கோழி உடல் நிலை ஆரோக்கியம் அடைய தொடங்கும். ஆனால் நோய் குணமாகி இருக்காது. கோழி உணவு உண்ண தொடங்கிய பின்பு கோழிக்கு வெள்ளை களிச்சலுக்கான மருந்தினை வைக்கலாம். நாங்கள் சொல்வெரின் என்ற மருந்தை பாவிக்கிரோம். ஆனால் தீவனகடைகளில் இதே மருந்து வேறு கொம்பனி பெயர்களில் கிடைக்கிறது. அதையும் பயன்படுத்தலாம்.
இயற்கை மருத்துவம்
வெள்ளை கழிசல் நோய்களுக்கு நிவாரணியாக இந்த முறையை பயன்படுத்தலாம்.
தீர்வு 1
தேவையான பொருட்கள்
பப்பாளி இலை
வேப்ப இலை
மஞ்சள் தூள்
விளக் எண்ணெய்
பப்பாளி இலை (Papaya), வேப்ப இலை (Neem) மற்றும் சிறு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து விளக்கெண்ணெயில் குழைத்து வாரத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.
தீர்வு 2:
ஒரு கோழிக்கு கொடுக்கும் மருந்து
கீழ்க்காய்நெல்லி செடி ஒரு முழுச் செடி (வேர் தண்டு இலை). இது கிடைக்காத பட்சத்தில் நாட்டு மருந்து கடைகளில் இதன் பொடி கிடைக்கும் 50 கிராம்
சின்ன வெங்காயம் 4 அல்லது 5
பூண்டு 2 அல்லது 3
சீரகம் 20 அல்லது 25g
மிளகு 2
கட்டி மஞ்சள் 1 துண்டு தூளாக இருந்தால் 5 அல்லது 10g.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து அதை நல்லெண்ணெய் அல்லது நெய் அல்லது வேப்பெண்ணெய் 3 சொட்டு விட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பெரிய கோழிகளுக்கு 4 சிறிய குஞ்சுகளுக்கு 2 அதன் வாயில் 3 அல்லது 5 நாட்கள் காலையும் மாலையும் போட்டு விடவும். இது மாதம் இருமுறை கொடுத்தால் மீண்டும் எந்த கோழிகளும் வராமல் தடுக்கலாம்.
இந்த ஆலோசனை உங்களில் பலருக்கு உதவலாம். நண்பர்களுக்கு பகிருங்கள்.
நன்றி.