Dora Fancy Farm

  • Home
  • Dora Fancy Farm

Dora Fancy Farm Natural Food producer

27/03/2022

Fancy chickens for Sale.
பிராமா
பீனீக்ஸ்
பொலிஸ்கப்
கடக்நாத்
பன்டம்
Call 0777699574

25/12/2021

Need
Automatically
incubater
(Send Details & price to Inbox)

14/11/2021

முட்டை இடும் கினிகோழி விற்பனைக்கு
1 சேவல் 2 பேடு
மொத்தமாக 4000/-
0777699574

25/10/2021

Need
Automatically
incubater
(Send price to Inbox)

15/10/2021

புதிதாக பொரித்த கோழி குஞ்சுகளுக்கு வைக்க வேண்டிய மருந்து அட்டவணை - எங்கள் பண்ணையில் நாங்கள் கடைப்பிடிக்கும் முறை.

கோழி குஞ்சுகள் பொரித்தவுடன் குறைந்தது 6 மணித்தியாலம் கழித்து வெளியில் கூடுகளில் அல்லது அதற்காக அமைக்கப்பட்ட இடத்தினுள் விட வேண்டும்.

1) நீர் வைக்கும் போது அதனுடன் குளுகோஸ் சிறிது சேர்த்து வைக்க வேண்டும். பின்னர் 3 மணி நேரத்துக்குள் அந்த நீரை அகற்ற வேண்டும்.

2) பின்னர் Chicktonic மற்றும் Ganadexil மருந்தினை தண்ணீரில் கலந்து கோழி குஞ்சுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வைக்க வேண்டும். இது தொடர்ந்து 3 நாட்களுக்கு வைக்க வேண்டும்.

3) பின்னர் அடுத்த 2 நாட்கள் selvit -E மருந்தினை கோழி குஞ்சுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வைக்க வேண்டும்.

4) 7வது நாள் ரணிகேட் - 1 மருந்தினை வைக்க வேண்டும். இந்த மருந்தை அரச மிருக வைத்தியசாலைகளில் பெற்று கொள்வது சிறந்தது.

5) 14வது நாள் கம்போரா - 1

6) 21ம் நாள் ரணிகட் - 2

7) 28ம் நாள் கம்போரா - 2

8) 45ம் நாள் அம்மை ஊசி ( இதனை கால்நடை மருத்துவர் ஒருவரின் உதவியுடன் கோழிக்கு போடுவது சிறந்தது.)

9) மூன்று மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை ரனிகட் மருந்தை கோழிக்கு கொடுப்பது சிறந்தது.

10) 2 மாதங்கள் தாண்டிய கோழிக்கு மாதம் 3 நாட்கள் Multivitamin கொடுப்பது சிறந்தது.

11) 2 மாதங்கள் தாண்டிய கோழிக்கு மாதம் 3 நாட்கள் நியூ டெட்ரா 50/50 கொடுப்பது சிறந்தது.

எப்போதும் கோழிக்கு மருந்துகள் மற்றும் உணவினை கொடுக்க சரியான அட்டவணையை பின்பற்றுங்கள்.

நன்றி.

15/10/2021

அம்மை நோய் ஒரு கோழியிலிருந்து இன்னொரு கோழிக்குத் தொற்றுமா?

27/09/2021

வான்கோழி முட்டை தேவை
யாழ்மாவட்டத்தில் இருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும்
0777699574

Original jet black கடக்நாத்குஞ்சுகள் தேவை0777699574
27/09/2021

Original jet black கடக்நாத்குஞ்சுகள் தேவை
0777699574

26/09/2021

விற்பனைக்கு
077699574
Jaffna

23/09/2021
முட்டை இடும் பருவத்திலுள்ள கினி கோழிச்சோடிகள் விற்பனைக்கு உண்டுJaffna0777699574
20/09/2021

முட்டை இடும் பருவத்திலுள்ள கினி கோழிச்சோடிகள் விற்பனைக்கு உண்டு
Jaffna
0777699574

19/09/2021

Copy from happy home farm
கோழி பராமரிப்பிற்கு உரிய மருந்து அட்டவணை - எங்கள் பண்ணையில் நாங்கள் பின்பற்றுவது.

1. வாரம் 2 முறை விட்டவின் C தண்ணீருடன் கலந்து கொடுத்தல்.
இது கோழிகளுக்கு நல்ல உற்சாகத்தையும் நோயெதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும்.

2. மாதம் 3 நாட்கள் multivitamin கொடுத்தல்.
நாங்கள் பாவிப்பது sp vita total என்னும் multivitamin. இவை கோழிகளின் உடலுக்கு தேவையான அனைத்து விட்டமின் சக்தியையும் வழங்கும். எனவே கோழிகள் manthamaaki விடாது.

3. மாதம் 3 நாள் Neo tetra 50/50 தண்ணீருடன் கலந்து கொடுத்தல்.
இது கோழிகளுக்கு சளித்தன்மை வராமல் முற்கூட்டியே பாதுகாக்கும்.

4. வாரம் ஒரு முறை அரைத்த முட்டை கோது உண்ண கொடுத்தல்.
கோழிகளுக்கு கல்சியம் குறைபாட்டை நிவர்த்தி செய்ய உதவும்.

5. வாரம் 3 நாட்கள் பொன்னாங்காணி, வல்லாரை, தக்காளி கலந்த கலவை கொடுத்தல்

6. வாரம் 2 நாட்கள் சின்ன வெங்காயம் உண்ண கொடுத்தல்.
சிறிய வெங்காயம் கோழிகளுக்கு நல்ல நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கும். மேலும் செரிமான தன்மையை கொடுக்கும்.

ஆர்மபத்தில் நோய்களை சமாளிக்க நிறைய கஷ்டப்பட வேண்டி இருந்தது. அதிக கோழிகளைப் பறிகொடுக்கவும் நேரிட்டது. ஆனால் t
அதன் பின்பு நாங்கள் பின்பற்றிய இந்த அட்டவணை நல்ல பலனை தந்தது.

உங்களுக்கும் உதவும் என நம்புகிறேன்.

நன்றி.

19/09/2021

Copy from muthur farm

கோழி தீவின விலையேற்றத்தால் மாற்று வழிமுறைகளை கையாள வேண்டி உள்ளது என்ன செய்யலாம்???

கோழிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கொடுக்க கூடிய உணவுகள்.

செயற்கை தீவனங்களின் விலை அதிகரிப்பால் கோழிகள் வளர்க்கும் அநேகமானோர் கவலையில் உள்ளனர். ஆனால் இயற்கையான தீவனங்களை தயார் செய்யும் போது செலவுகளை குறைப்பதோடு கோழிகளின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க முடியும். நான் முயற்சி செய்த உணவுகளின் பட்டியல் கீழே உள்ளது. தயவு செய்து முயற்சி செய்த பின்பு உங்கள் எதிர்மறையான கருத்துகளை பதிவு செய்யுங்கள்.

1. கறையான்
சாதரணமாக கரையான்கள் எங்கள் அயல் பகுதிகளில் கிடைக்க கூடியவை. மேலும் கோழிகளுக்கு மிகவும் பிடித்த உணவும் கறையான் தான். அதிக புரதம் அவற்றில் காணப்படுவதால் கோழி குஞ்சுகள் விரைவாக வளர்ச்சி அடையும். கிழமையில் ஒரு நாள் கரையான்கள் உணவாக கொடுக்க படும் போது கோழிகளின் வளர்ச்சி வீதம் மிக மிக அதிகமாக இருக்கும்.

2) புழுக்கள்
கழிவுகள் தேங்கும் இடங்களில் சற்று ஈரலிப்பை ஏற்படுத்தினால் இலகுவில் பெருந்தொகை புழுக்கள் உருவாகும். கோழிகள் புழுக்களை அதிகம் உண்ணும் போது அதிக புரத சத்து கிடைக்கும்.

3) அவித்த முட்டை
கோழிகள் முட்டையை இலகுவில் உண்ணாது. ஆனால் கோழி குஞ்சுகளுக்கு கிழமையில் ஒரு நாள் 5 கோழிக்கு 1 முட்டை என கொடுத்து வந்தால் அவற்றின் வளர்ச்சி அதிகரிக்கும்.

4) வெங்காயம்.
இதுவும் கோழிகளுக்கு மிகவும் பிடித்த உணவு தான். மேலும் அதிக நோயெதிர்ப்பு சக்தியை கோழிக்கு கொடுக்க கூடியது. சிறிதாக நறுக்கிய வெங்காயத்தை வாரம் 3 முறை கோழிகளுக்கு கொடுத்து வந்தால் சளி போன்ற நோய்கள் தாக்காது.

5)கம்பு
இது ஒரு தானிய வகை. உலகில் அதிக உற்பத்தி அளவை கொண்டிருந்தாலும் எமது பகுதியில் கம்பு சற்று விலை அதிகமாகவே கிடைக்கிறது. ஆனால் இது நார்சத்து அதிகம் உள்ளது. சற்று தண்ணீரில் ஊற வைத்து கொடுத்தால் கோழிகள் விரும்பி உண்ணும்.

6) சோளம்
இது எமது பகுதிகளில் இலகுவாக கிடைக்கும்.
ஆனால் முழுதாக போடும் போது கோழிகள் உடனடியாக உண்ணாது. அல்லது உண்ணுவதற்கு கடினப்படும்.
எனவே நன்றாக அரைத்த சோளத்தை சற்று தண்ணீர் விட்டு குழைத்து கொடுத்தால் கோழிகள் விரும்பி உண்ணும்.

7)கோதுமை
கோதுமையும் கோழிகளின் ஆரோக்கியத்துக்கு நல்ல உணவு. ஆனால் கோதுமையை தனியமாக அப்படியே போடும் போது கோழிகள் உள்ளேடுத்தாலும் செரிமான பிரச்சினை ஏற்படும். எனவே தண்ணீரில் ஊற வைத்து கொடுத்தால் இலகுவாக கோழிகள் உண்ணும்.

😎 அசோலா
இது கோழிகளுக்கு மிக பிடித்த ஒரு உணவு. அசோலாவை சாதரணமாக கொடுத்தால் கோழிகள் நன்றாக உண்ணும். அதில் அதிக புரதம் உள்ளதால் கோழிகள் நல்ல ஆரோக்கியமான வளர்ச்சியை காட்டும்.

9) கருவாடு
சிறிய நெத்தலி கருவாடு கோழிகளுக்கு நல்ல ஒரு உணவு. நன்றாக தண்ணீரில் கழுவி பின்பு கோழிகளுக்கு கொடுத்தால் கோழிகள் விரும்பி உண்ணும். குறிப்பாக வெள்ளடியன் கோழிகள் கருவாடு உண்ணும் போது நல்ல வளர்ச்சியை காட்டும்.

10) பொன்னாங்காண, கங்குன், பசளி
கீரைகள் அதிக அயன் சத்து கொண்டவை. மேலும் மருத்துவ குணம் கொண்டவை. சிறிய பருவத்தில் இருந்தே கோழிகளுக்கு இவற்றை உண்ண பழக்கினால் நோய்கள் இல்லாமல் கோழிகள் வளரும்.

மேலுள்ள இயற்கை உணவுகளை கொடுக்கும் போது எனது கோழிகள் நல்ல வளர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் காட்டின. அதோடு தீவன செலவும் செயற்கை தீவனத்தை விட குறைவாகவே முடிந்தது. நீங்களும் முயன்று பாருங்கள்.
நன்றி.

Original kadaknath 1 ஒரு மாத குஞ்சுகள் தேவை0777699574
15/09/2021

Original kadaknath
1 ஒரு மாத குஞ்சுகள் தேவை
0777699574

columbian brahma 1 month chicken need0777699574
15/09/2021

columbian brahma
1 month chicken need
0777699574

Parrot beak long tailவிற்பனைக்கு இருப்பின் தொடர்பு கொள்ளவும்0777699574
15/09/2021

Parrot beak long tail
விற்பனைக்கு இருப்பின் தொடர்பு கொள்ளவும்
0777699574

முட்டை இடும் பருவத்திலுள்ள கினி கோழி விற்பனைக்கு உண்டுPair 3000Jaffna0777699574
14/09/2021

முட்டை இடும் பருவத்திலுள்ள கினி கோழி விற்பனைக்கு உண்டு
Pair 3000
Jaffna
0777699574

Address


Telephone

+94777699574

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dora Fancy Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share