08/12/2020
நாட்டுக்கோழி வளர்ப்போமா..?
*********************************
( கோழி குஞ்சுகளை எப்படி இனம் காணலாம். )
1. தலையை பிடித்து தூக்கும் பொழுது கால்கள் கீழ் நோக்கி இருந்தால் பெண்.
இரு கால்களும் மேல் நோக்கி உயர்ந்து இருந்தால் அது ஆண் ஆகும்.
2. இருகால்களை பிடித்து தலைகீழாக தொங்க விடும் போது தலை மேல் நோக்கி தூக்கி இருந்தால் அது ஆண். கீழே தொங்கியது போன்று இருந்தால் அது பெண் ஆகும்.
3. குஞ்சு பொரித்து மூன்றாம் நாளில் குஞ்சின் சிறகு பகுதியைப் விரித்து பார்க்கும் பொழுது. தொடராக சம அளவில் சிறிய இறகுகள் வளர்ந்திருந்தால் பெண் ஆகும். தொடர் இல்லாமல் ஒன்று விட்டு ஒன்றாக சிறகுகள் முளைத்து இருந்தால் அது ஆண் ஆகும்.
4. குஞ்சு பொரித்த ஏழாவது நாளில் தலையில் சொன்டிற்க்கு மேல் உள்ள பூ என்று சொல்லப்படும் அப்பகுதி சற்று வளர்ந்து இருந்தால் அது ஆண் ஆகவும்.
வளராமல் சிறியதாக அமர்ந்திருந்தால் அது பெண்ணாகவும் இருக்கும்.
5. இதுபோன்று நம் முன்னோர்கள் சற்று உருண்டை வடிவமாக இருந்தால் அது பெண் முட்டை எனவும். நீள் வடிவமாக சற்று கூராக இருந்தால் அது ஆண் முட்டை எனவும் முட்டையிலும் ஆண் பெண் என இருவகை முட்டைகளையும் இலகுவாக இனம் பிரிக்கின்றார்கள்.
( இயற்கை மருத்துவம் )
* வெள்ளைக்கழிசல் நோய்களுக்கு நிவாரணியாக இதனை பின்பற்றலாம். நம் முன்னோர்கள் பயன் படுத்திய அருமருந்து, இன்றும் கிராமங்களில் இம்முறை வழக்கத்தில் இருந்து வருகிறது.
தேவையான பொருட்கள்
பப்பாளி இலை
வேப்ப இலை
மஞ்சள் தூள்
விளக் எண்ணெய்
பப்பாளி இலை, வேப்ப இலை மற்றும் சிறு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து விளக்கெண்ணெயில் குழைத்து வாரத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.
( மருந்துக்கான அளவுகள் )
* கீழாநெல்லி செடி ஒரு முழுச் செடி வேர் தண்டு இலை. இது கிடைக்காத பட்சத்தில் நாட்டு மருந்து கடைகளில் இதன் பொடி கிடைக்கும்.
1. கீழாநெல்லி 50g.
2. சின்ன வெங்காயம் 5.
3. பூண்டு 5.
4. சீரகம் 25g.
5. மிளகு 5.
6. மஞ்சல் 5g.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து அதை நல்லெண்ணெய் அல்லது நெய் அல்லது வேப்பெண்ணெய் 3 செட்டு விட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பெரிய கோழிகளுக்கு 4 சிறிய குஞ்சுகளுக்கு 2 அதன் வாயில் 3 அல்லது 5 நாட்கள் காலையும் மாலையும் போட்டு விடவும்.
இது மாதம் இருமுறை கொடுத்தால் மீண்டும் எந்த கோழிகளும் வராமல் தடுக்கலாம்.
* மழை காலம் மற்றும் வெயில் காலம் என அனைத்து காலங்களிலும் அனைத்து வகையான நோய்களுக்கும் ஒரே நாட்டு மருந்து தயாரிக்க தேவையான 6 பொருட்கள்.
1. துளசி இலை.
2. தூது வலை இலை.
3. கற்பூரவள்ளி இலை.
3. முல் முருங்கை இலை.
4. பப்பாளி இலை.
5. கொய்யா இலை.
6. வேப்ப இலை.
செய்முறை மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து இலைகளையும் ஒரே அளவாக எடுத்துக்கொண்டு அதனை நன்கு அரைத்து சிறு உருண்டைகளாக்கி 4 மாத கோழிகளுக்கு (0.75 g) என்ற அளவில் கொடுக்க வேண்டும்.
( அம்மை நோய் )
* கோழிகளின் இறகு அற்ற பகுதிகள், உறுப்புகளைப் பாதிக்கும் நச்சுயிரி நோயே அம்மை நோயாகும். முதலில் பரு உண்டாகி, பிறகு அதில் சீல் கட்டி நீர் கோர்த்த கொப்பளங்களாகி உடைந்து விடும்.
இந்தச் சமயத்தில் உடல் வெப்பம் அதிகரிக்கும், சோர்ந்து அசைவற்ற நிலையில் இருக்கும். உடல் எடையும், முட்டை உற்பத்தியும் குறையும். பண்ணைகளில் 20 - 30 சதம் வரை இறப்பு ஏற்படக்கூடும்.
கோடைக் காலங்களிலேயே ஏற்படக்கூடிய இந்த நோய், அம்மையின் காய்ந்த உதிர்ந்த பொடுகுகள், கொசுக்களின் வழியாகப் பரவுகிறது. இந்த நோய் பரவாமல் இருக்கத் தடுப்பூசி போடுவது அவசியம்.
( இரத்தக் கழிச்சல் )
மூன்று வார வயதுக்கு மேலான குஞ்சுகள், கோழிகளை ஈரமான இடத்தில் அடைத்து வைக்கும்போது இரத்தக் கழிச்சல் அதிகளவில் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கோழிகளின் குடல் வீங்கி இரத்தக் கசிவு ஏற்படுவதால் எச்சத்தில் இரத்தக் கசிவு காணப்படும். இதைத் தடுக்க கொட்டகையைச் சுத்தமாகவும், ஈரமின்றியும் பாதுகாக்க வேண்டும்.
( ஈ , ஒட்டுண்ணி நோய்கள் )
* ஒட்டுண்ணி நோய்கள் அக ஒட்டுண்ணி, புற ஒட்டுண்ணி என இரு வகைப்படும். திறந்த வெளியில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளை அதிகளவில் அக ஒட்டுண்ணிகள் தாக்குகின்றன.
உருண்டை, நாடாப் புழுக்கள் கோழிகளைத் தாக்கி உணவு செரிமானக் கோளாறு, கழிச்சலை உண்டாக்குவதோடு இறப்புகளையும் ஏற்படுத்தும்.
இதனால், ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு மாதம் ஒரு முறையும், கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு 3 மாதத்துக்கு ஒரு முறையும் குடல்புழு நீக்கம் செய்வது அவசியம்.
( உ. பற்றாக்குறை நோய்கள் )
* தோல் முட்டையிடுதல், கால்வாதம் மற்றும் கோழிகள் ஒன்றையொன்று கொத்துதல் ஆகியவை பற்றாக்குறை நோய்களாகும்.
வெயில் காலங்களிலும், கூண்டு முறை கோழி வளர்ப்பிலும் அதிகமாகக் காணப்படும் தோல் முட்டையிடுதல் நோயைத் தவிர்க்கத் தீவனத்தில் கால்சியம், வைட்டமின் டி, பாஸ்பரஸ் சத்துகள் மற்றும் கிளிஞ்சல் தூளை அதிகப்படியாகக் கலந்து கொடுக்க வேண்டும்.
* கூண்டு முறையில் கோழிகளை வளர்க்கும் போது கோழிகளின் கால்கள் வலுவிழந்து நிற்க முடியாமலும், உண்ண முடியாமலும் இறப்பதே கால் வாதமாகும். இந்த நோய் தாக்கிய கோழிகளைக் கூண்டிலிருந்து வெளியே எடுத்து ஆழ் கூளத்தில் சில நாள்கள் விட வேண்டும். குடிநீரிலும், தீவனத்திலும் கால்சியம் அதிகமுள்ள சத்து மருந்துகளை சில நாள்கள் கொடுக்க வேண்டும்.
* வைட்டமின் பி12 உயிர்ச்சத்து மருந்தை ஊசி மூலம் செலுத்துவதன் மூலமும் இந்த நோயைத் தவிர்க்கலாம். தீவனத்தில் நார்ச்சத்து, புரதம், அமினோ அமிலங்களும், காற்றோட்ட வசதி, இடவசதி, தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், புற ஒட்டுண்ணிகள் இருந்தாலும் கோழிகள் ஒன்றையொன்று கொத்திக் கொள்ளக்கூடும். இதற்கான காரணத்தைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதன் மூலம் இந்தப் பாதிப்பை தடுக்க முடியும்.
( விற்பனை )
குஞ்சுகள் வளர்ந்த 3 மற்றும் 4 மாதங்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம். இயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள். மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்காமல் நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் .
( நிதி முதலீடு )
" உதாரணமாக சந்தையில் கிடைக்கப்படும் விலைகள் இலங்கை ரூபாயில் "
150 - 200 கோழிகளுக்கு கொட்டகை அமைக்க குறைந்தது 30,000 - 50,000 தேவைப்படும்.
அடை வைப்பதற்கு ஏற்ற கோழி முட்டை களின் விலை..?
போர்க்கோழி முட்டை 100 - 150 Rs.
வான்கோழி முட்டை 80 - 100 Rs.
பென்ரம்கோழி முட்டை 50 - 80 Rs.
ஒரு நாள் குஞ்சின் விலை 65 - 80 Rs.
இரண்டு வார குஞ்சின் விலை 150 - 200 Rs.
ஒரு ஏக்கருக்கு 2000 கோழிகள் வரை வளர்க்கலாம்.
கோழிகளின் விற்பனை விலை விபரம்
ஒரு முட்டையின் விலை 25 Rs.
8 மாத நாட்டுச் சேவல் 1300 - 1800 Rs.
8 மாத பேடு 700 - 900 Rs.
5 மாத கன்னிப்பேடு 550 - 700 Rs.