14/01/2018
🌄 அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் 🌄
பொங்கலுக்கான பிள்ளையார் சுழி !

🍯 மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே மனிதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தமிழர்கள் என்பதற்கொரு உதாரணம் பொங்கல்.
🍯 பொங்கல் என்பதை மதத்துடன் இணைக்காமல் எல்லோரும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருநாளாக இருப்பதே பொங்கலின் தனிசிறப்பு.
🍯 சங்ககாலம் முதலே கி.மு.200-ம் நு}ற்றாண்டுக்கு முன்னரே பொங்கல் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் உண்டு.
பொங்கல் தோன்றிய விதம் - தைந்நீராடல் :
🍯 பொங்கலுக்கெல்லாம் மூதாதை விழா எனப்படுது தைந்நீராடல்.
🍯 இந்த மாதம் முழுவதும் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பார்கள். முடிக்கு எண்ணெயிட்டு கொள்ள மாட்டார்கள். மேலும் பேசும் போது கடுமையான சொல்லை பயன்படுத்த மாட்டார்கள்.
🍯 சங்ககாலத்தில் தை மாதத்தில் விடியற்காலத்தில் ஆற்றுநீரும், குளத்து நீரும் வெதுவெதுப்பாக இருக்கும். மாலையில் குளுமையாக இருக்கும். சங்ககால மகளிர் காலையில் இந்த வெதுவெதுப்பில் நீராடி மகிழ்ந்தனர். இதனை இலக்கியங்கள் தைநீராடல் (தை நீர் தண்மை உடையது. இங்கு தண்மை என்ற சொல்லிற்கு வெதுவெதுப்பு என்று பொருள்) எனக் குறிப்பிடுகின்றன.
🍯 ஈர மண்ணில் செய்யப்பட்ட கட்யாயணி என்ற பெண் தெய்வத்தின் சிலையை பெண்கள் வணங்கி வந்தார்கள். கி.பி. எட்டாம் நு}ற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையிலும், மாணிக்க வாசகரின் திருவெம்பாவையிலும் (மார்கழிஃதை நீராடல் பற்றிக் குறிப்பிடுகிறார்) தை மாதத்தின் (ஜனவரி - பிப்ரவரி) முதல் நாள் தங்கள் நோன்பை முடித்துக் கொள்வார்கள்.
🍯 நெற்பயிர்கள் செழிப்பதற்காக அளவுக்கு அதிகமான மழையை கொண்டு வருவதற்காகவே இந்த நோன்பு. பழமை வாய்ந்த இந்த மரபுகளும், சடங்குகளும் தான் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது.
🍯 தற்போது வருடம் முழுவதும் வயலில் விளைவித்த பொருட்களை அறுவடை செய்து, அதனை கொண்டு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும், விதமாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
🍯 இந்த தை முதல் நாள் அன்று விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பொருட்களை கடவுளுக்கு படையலிட்டு, பொங்கல் வைத்து தன்னுடைய குடும்பத்தாருடன் கடவுளையும், சு ரியனையும் வணங்கி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
🍯 இன்று இதில் பல நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்றாலும், இந்நாளில் செய்யப்படும் சடங்களை தெரிந்தாவது வைத்துக் கொள்ளலாம்.
இதுவரை கொண்டாடிய பொங்கலை விட இந்த பொங்கலை அர்த்தம் அறிந்து சிறப்பாக கொண்டாடுவோம் !
🌺 அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌺
(நன்றி: நித்ரா)