நாமக்கல் இயற்க்கை விவசாயம்

  • Home
  • India
  • Namakkal
  • நாமக்கல் இயற்க்கை விவசாயம்

நாமக்கல் இயற்க்கை விவசாயம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from நாமக்கல் இயற்க்கை விவசாயம், Urban Farm, mullai nagar, Namakkal.

31/07/2018

ஆதார் எண்னை வெளியிட்டு சவால்விட்ட சில மணிநேரத்தில்
மூக்கு அறுப்பட்ட டிராய் தலைவர் சர்மா!!!

அடுத்து பிரதமர் மோடிக்கு சவால்விட்ட ஹக்கர்???

அசோலா விதை இலவசம் 100 கிராம் மட்டும்....நேரில் வந்து வாங்குபவர்களுக்கு மட்டும்.......மற்றும் தமிழகம் முழுவதும்  courier ...
13/07/2018

அசோலா விதை இலவசம் 100 கிராம் மட்டும்....நேரில் வந்து வாங்குபவர்களுக்கு மட்டும்.......மற்றும் தமிழகம் முழுவதும் courier அனுப்பிவைக்கப்படும் ..வாட்ஸ் ஆப் or அழைக்க @ 7010529207. ஈரோடு ,பவானி.

பெரணி வகையைச் சேர்ந்த நுண் தாவரம் அசோலா. கறவை மாடுகளுக்குச் சிறந்த தீவனம். பசுக்களுக்குத் தினமும் இதைக் கொடுத்துவந்தால், 2 லிட்டர் கூடுதல் பால் கிடைக்கும் என்கின்றனர் கால்நடை வளர்ப்பு ஆர்வலர்கள்.

அசோலா என்றால்?

அசோலா என்பது பெரணி வகையைச் சார்ந்த நுண்தாவரம். அசோலாவைக் கால்நடைகள் ருசித்து உண்ணும். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் அமினோ அமிலங்கள், உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் தாதுக்களான கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீஸ், வைட்டமின்கள் போன்றவற்றையும் உள்ளடக்கிய அற்புதச் சக்தி படைத்தது அசோலா. அது மட்டுமல்லாமல் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, புரதச் சத்து நிறைந்தது.

அசோலாவால் என்ன பலன்?

அசோலாவைக் கறவை மாடுகளுக்குக் கொடுக்கும்போது, ஏறத்தாழ இரண்டு லிட்டர்வரை கூடுதலாகப் பால் பெற முடியும். கறவை மாடுகள் மட்டுமின்றி முயல், பன்றி, வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி, மீன் போன்றவையும் விரும்பி சாப்பிட்டால், எடை கூடும். கோழிகளுக்கு அசோலா கொடுக்கும்போது முட்டையிடுவது அதிகரித்து, உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

அசோலாவை முதன்முதலில் கறவை மாடுகளுக்குக் கொடுக்கும்போது தினம் 100 முதல் 200 கிராம் என்ற அளவில் ஆரம்பித்து, படிப்படியாக 1 முதல் 1½ கிலோ வரை கொடுக்கலாம்.

அசோலா வளர்ப்பது எப்படி?

முதலில் 5-க்கு 6 அடி நீளமும், 3-க்கு 4 அடி அகலமும் ஒன்று முதல் 1½ அடி வரை ஆழமும் கொண்ட குழிகளை வெட்டிக்கொள்ள வேண்டும். அதனுள் கெட்டியான பிளாஸ்டிக் பேப்பர், தார்ப்பாயை விரித்துக் கொள்ள வேண்டும். முதலில் அரை அடி உயரத்துக்குச் செம்மண் கலந்த தோட்டத்து மண்ணைப் போட்டு, இரண்டு கைப்பிடி பாறைத் தூள் அல்லது குவாரி மண் அல்லது ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது கிடைக்கும் பாறைத் தூளைத் தூவ வேண்டும்.

நாட்டுப் பசுஞ் சாணம் ஒன்று முதல் 2 கிலோவரை, வேப்பம் புண்ணாக்கு 50 முதல் 100 கிராம்வரை போட்டு, சுமார் ½ அடி தண்ணீர் இருக்குமாறு விட வேண்டும். தண்ணீர், மண், புண்ணாக்கு ஆகியவற்றைச் சிறிது நேரம் கிளறிவிட வேண்டும். அதன்பின் சுமார் ½ முதல் 1 கிலோ வரை அசோலா விதைகளைத் தூவ வேண்டும். 10 முதல் 15 தினங்களில் தொட்டி முழுவதும் அசோலா வளர்ந்துவிடும்.

இதிலிருந்து தினமும் ½ கிலோ தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அசோலா படுக்கைக் குழிகளைத் தயார் செய்துகொள்ளலாம்.

வாரம் ஒரு முறை ஒரு கிலோ நாட்டுப் பசுஞ் சாணம், ஒரு கைப்பிடி ஆழ்துளைக் கிணறு மண் அல்லது பாறை மண் போட வேண்டும். அத்துடன் மாதத்துக்கு ஒரு முறை அடி மண்ணைக் கொஞ்சம் எடுத்துவிட்டு, புது மண் போட வேண்டும். தண்ணீரின் அளவு 7 முதல் 10 செ.மீ. இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

10 - 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரைப் பாதி அளவுக்கு வெளியேற்றிப் புது நீரை மாற்ற வேண்டும். 6 மாதங்களுக்கு இதிலிருந்து தினமும் அசோலா அறுவடை செய்யலாம். அதிவேகமாக வளரும் தன்மை கொண்ட காரணத்தால், தினமும் அசோலாவை எடுத்துக்கொண்டு புதிதாக வளர்வதற்கு இட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எந்த நிலையிலும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போக விட்டுவிடக் கூடாது.

அதிக செலவு பிடிக்குமா?

அசோலா வளர்ப்பது சுலபமானது மட்டுமல்ல, கால்நடைகளின் தீவனத் தேவையைப் பூர்த்திசெய்வதுடன், அடர் தீவனத்துக்குச் செய்யும் செலவும் குறைய வாய்ப்புள்ளது.

கறவை மாடுகளுக்குக் கொடுக்கிற அடர் தீவனமான பருத்திக்கொட்டை, தவிடு, புண்ணாக்கு போன்றவற்றைப் பாதியாகவோ அல்லது மூன்றில் ஒரு பங்காகவோ குறைத்துக் கொள்ளலாம். அசோலா உற்பத்தி செய்ய 1 கிலோவுக்கு 50 பைசாவுக்கும் குறைவாகவே செலவாகும். 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நன்கு செழித்து வளரும்.

கடுமையான பகல் நேர வெயில் நேரடியாகப் படும் வகையில், அசோலா வளர்ப்புக் குழிகளை அமைக்கக் கூடாது. பகல் நேர வெயில் படாத வகையில், மேலே பச்சை துணி கட்டி நிழல் படுமாறு அமைக்க வேண்டும். காலை, மாலை நேரச் சூரியனின் இளம் வெயில் அசோலாவுக்கு மிக மிக நல்லது.

அப்படியே கொடுக்கலாமா?

அசோலாவைக் கால்நடைகளுக்குக் கொடுக்கும் முன்பு, நான்கைந்து முறை தண்ணீரில் அலசிக் கொடுக்க வேண்டும். அசோலாவில் சாணத்தின் மணம் இருந்தால், கால்நடைகள் உண்ணாமல் போய்விடக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் அலசும்போது வரும் சிறிய செடிகளை, மீண்டும் அசோலா வளர்ப்பு தொட்டியிலேயே விட்டுவிட வேண்டும்.

கால்நடைகள் அசோலாவை சுலபமாக ஜீரணித்துக்கொள்ளும். அடர் தீவனத்துடன் கலந்தும் தனியாகவும் பசுந்தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம்.

அசோலா விதைகளை நெல் நாற்று வயல்களில் தூவிவிட்டால், வயலில் தண்ணீர் தேங்கி இருக்கும்போது நன்கு செழித்து வளரும். தண்ணீர் இல்லாமல் வற்றிப்போகும்போது, அசோலா மக்கி உரமாகிப் பயிருக்கு ஊட்டம் கொடுக்கும். அதன் மூலம் உரச் செலவைக் குறைக்கலாம்.

மேலும் தொடர்புக்கு 7010529207 8883618221 ஈரோடு 638316

24/05/2018

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
**************************************************************
தற்போது வெகு வேகமாக ( பொய்யாக ) பரப்பப்பட்டு வரும் நிபா வைரஸ் பற்றிய உண்மை. மேலும் இதற்கும் வவ்வாலுக்கும் என்ன சம்பந்தம் . கீழே படியுங்கள் ... அறிந்துகொள்ளலாம்.

முதலில் வவ்வால் பற்றி பார்க்கலாம்.
இவை முக்கியமாக மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய பூச்சி, கொசு, வண்டு மற்றும் ஈக்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றன.

வவ்வால்கள் காலனியாக(கூட்டமாக) வாழக்கூடியது. இந்த வவ்வால்களின் ஒரு காலனி(கூட்டம்) ஒரு இரவில் 250 டன் (இரண்டு லச்சத்தி ஐம்பது ஆயிரம் கிலோ) எடையுடைய பூச்சி, வண்டு மற்றும் கொசுக்களை தங்கள் உணவாக உண்ணுகின்றன. ஒரு சிறிய பழுப்பு நிற வவ்வால்் (Little brown bat) ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரைப் பிடித்து உண்ணக்கூடியவை.

மேலும் இவைகள் தங்கள் உணவாக பழங்களான வாழை, மாம்பழம், கொய்யா பேரிச்சை, அத்தி ஆகியவற்றை உண்பதனால் வவ்வால்களின் மூலம் 500 க்கும் மேற்ப்பட்ட தாவரங்களின் அயல் மகரந்தச்சேர்க்கை நடைப்பெற பெரிதும் துணைச்செய்கின்றன. மேலும் இவற்றின் கழிவுகளில் மிக அதிக அளவிற்கு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் மிகச்சிறந்க உரமாக பூமிக்கு அமைந்துவிடுகின்றன.

வவ்வால்களின் வாயில் சுரக்கும் உமிழ் நீரிலிருந்து மனிதர்களுக்கு ஏற்படும் இதய சம்பந்தமான நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகின்றது. மேலும் மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதை தடுக்கவும் காயங்களிலிருந்து வெளியேறும் இரத்தத்தை விரைவில் உறைய வைக்கவும் இவை பயனாகின்றன.

சரி ...இப்போது நிபா வைரஸ் முக்கியமாக வௌவால்கள் மூலம் பரவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் பொய்தான். மீடியாக்கள் கையில் இருப்பதால் பொய் வேகமாக பரவுகிறது.

இப்போது என்ன நடக்கும் .......?
நிபா வைரஸ் பரவாமல் தடுக்கிறேன் என்ற பெயரில் வவ்வால்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படும். அரசாங்கமே கூட இதை ஊக்குவித்து பரிசும் கூட தரலாம் .

ஒரு காலத்திற்கு மேல் வவ்வால்கள் பெருமளவு குறைந்து விடும். அப்போது கொசுக்கள் வரைமுறை இல்லாமல் பெருகும். இதனால் நோய்கள் பெருகும் .
அயல்மகரந்த சேர்க்கை குறையும். தீய பூச்சிகளின் எண்ணிக்கை பெருகி பயிர் உற்பத்தி பாதிக்கும்.

இதனால் கார்பெரேட் கம்பெனிகளுக்கு கொண்டாட்டம் . விதவிதமான கொசுவர்த்திகள் பெருகும் .நல்ல லாபம். உணவு பொருள்களை இறக்குமதி செய்யலாம். நல்ல லாபம். பல்வேறு நோய்கள் பெருகும். மருந்து கம்பெனிகளுக்கு லாபம். நமக்கு பட்டை நாமம் .

இது மட்டுமில்லை ....நிபா வைரஸுக்கு மருந்து என்று இல்லாத ஒன்றை விற்கலாம் . நல்ல லாபம்.
நிபா வைரஸுக்கு தடுப்பூசி என்ற பெயரில் பள்ளிகள் முதல் பஸ்ஸ்டாண்ட் வரை உங்களிடம் கட்டாயப்படுத்தி போட வைக்கலாம் . நல்ல லாபம்.
சிந்திக்க தெரியாத மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டாட்டம்.

கார்பரேட் சரியாக வருமான காய் நகர்த்துகிறான்..புரிந்துகொள்ளுங்கள்.

இதை தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

இப்படிக்கு.......

Healer ச.செந்தில்குமார். M.Acu, D.N.Y.S., D.Varma.
வர்மா மருத்துவர், அக்குபஞ்சர் சிகிச்சையாளர், ரெய்கி மாஸ்டர், இயற்கை மருத்துவர்.
திருவாரூர்.
அலைபேசி : 9842380877, 7010411038

13/05/2018

அம்மா வார்த்தை அல்ல தொப்புள் கொடி உறவு,உடலின் பாதி உருவம் **அம்மா

Address

Mullai Nagar
Namakkal
637001

Telephone

+60 11-1257 3005

Website

Alerts

Be the first to know and let us send you an email when நாமக்கல் இயற்க்கை விவசாயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Urban Farms in Namakkal

Show All