29/09/2024
ஊடக அறிக்கை:
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மத்திய ஆலோசனை சபையின் தீர்மானங்கள்.
========================================
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 2024 நவம்பர் மாதம் 14 ஆம் திகதி் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபடுவதை காண முடிகிறது.
இந்நிலையில் சட்டவாக்க சபையான பாராளுமன்றத்திற்கு அறிவு மற்றும் ஆற்றல் மிக்க நேர்மையான, மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்படக்கூடிய வேட்பாளர்களையே களமிறக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளிடமும் சுயேட்சைக் குழுக்களிடமும் கோரிக்கை விடுப்பதாக 2024 செப்டம்பர் 28ஆம் திகதி நடைபெற்ற இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மத்திய ஆலோசனை சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், வேட்பாளர்களுக்கு இருக்க வேண்டிய ஆகக் குறைந்த தகுதி பற்றி ஏலவே ஜமாஅத் உள்ளிட்ட சமூக, சமய நிறுவனங்கள் முன்னின்று தயாரித்த ஆவணம், நாட்டில் செயற்படுகின்ற அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற சிவில் அமைப்புகள் சார்பாக ஜனாதிபதி உள்ளிட்ட கட்சித் தலைவர்களிடம் கைளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இம்முயற்சிற்கு ஜமாஅத் பூரண ஆதரவை தொடர்ந்தும் வழங்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கும் வேட்பாளர்களிலிருந்தே வாக்காளர்கள் பாராளுமன்றத்துக்கான தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வேண்டி இருப்பதால், மேற்குறிப்பிட்ட வழிகாட்டலுக்கு அமைவாக தகுதி வாய்ந்த, தரமான வேட்பாளர்களை களமிறக்கும் கடப்பாடு அரசியல் கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும் தலைமைத்துவங்களுக்கு இருக்கிறது. சகல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் இவ்விடயத்தில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு சபை வேண்டிக் கொள்கிறது.
வன்முறைகளற்ற, அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படாத, சுதந்திரமானதும் நீதியானதுமான, பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு அரசு முழுமையான ஈடுபாட்டுடனான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பது ஜமாஅத்தின் எதிர்பார்ப்பாகும்.
அத்தோடு எதிர்வரும் பொதுத் தேர்தல் மூலம் சிறந்த பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் சகல சமூகங்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என ஜமாஅத் வேண்டிக் கொள்வதோடு, ஜமாஅத்தின் யாப்பின் பிரகாரம் ஜமாஅத் எந்த அரசியல் கட்சிக்கோ சுயேட்சைக் குழுவுக்கோ சார்பாகவோ, எதிராகவோ செயல்பட மாட்டாது; நாட்டினதும் நாட்டு மக்களின் நலனுக்காக சகல தரப்பினருடன் ஒத்துழைக்க ஜமாஅத் எப்போதும் தயாராக இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், ஜமாஅத் அங்கத்தவர் எவரும் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க முடியாது; எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அல்லது வேட்பாளருக்கும் சார்பாகவோ எதிராகவோ தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட முடியாது; ஆனால், அரசியல் கூட்டங்களில் அவர்கள் கலந்து கொள்ளலாம்; தான் விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம், என்ற ஜமாஅத்தின் நீண்ட கால நிலைப்பாட்டையும் மத்திய ஆலோசனை சபை மீண்டும் உறுதிப்படுத்தியது.
ஊடகப் பிரிவு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
29.09.2024
----------------------------------------------------------------------
Press Statement
Resolutions of the Sri Lanka Jama'athe Islami Central Advisory Council Regarding the Upcoming General Election
--------------------------------------------------------------------
It has been announced through a gazette notification that the parliament has been dissolved and the general election will be held on November 14, 2024. Political parties can be seen actively engaged in selecting their candidates.
In this context, it was decided at the meeting of the Sri Lanka Jama'athe Islami Central Advisory Council held on September 28, 2024, to request all political parties and independent groups to field only knowledgeable, capable and honest candidates who can act with the people's welfare in mind for the legislature, which is the parliament.
Furthermore, it was decided that Jama'ath would continue to provide full support to the effort, as arrangements have been made to hand over to party leaders, including the President, on behalf of civil organizations representing all communities operating in the country, a document prepared by social and religious organizations, including Jama'ath, regarding the minimum qualifications required for candidates.
Since voters have to select their representatives for parliament from the candidates fielded by political parties and independent groups, the leadership of political parties and independent groups have the obligation to field honest, competent and service minded candidates in accordance with the aforementioned guidelines. The Council requests all political parties and independent groups to act responsibly in this regard.
Jama'ath expects the government to provide full cooperation with complete commitment to conduct a violence-free, fair, and just general election in which state properties are not misused.
In addition, Jama'ath requests that all communities act responsibly to ensure that good representatives are elected to parliament through the upcoming general election, and it was decided that, according to Jama'ath's constitution, Jama'ath will not act for or against any political party or independent group; Jama'ath will always be ready to cooperate with all parties for the benefit of the country and its people.
Moreover, the Central Advisory Council reaffirmed Jama'ath's long-standing position that no Jama'ath member can contest as a candidate in the election; they cannot engage in election campaigns for or against any political party or candidate; however, they can attend political meetings and vote for candidates of their choice.
Media Division,
Sri Lanka Jama'athe Islami
29.09.2024
මාධ්ය නිවේදනය
ඉදිරි මහ මැතිවරණය සම්බන්ධයෙන් ශ්රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි මධ්යම උපදේශක සභාවේ තීරණ.
--------------------------------------------------------------------
පාර්ලිමේන්තුව විසුරුවා හැර 2024 නොවැම්බර් මස 14 වන දින මහ මැතිවරණය පැවැත්වෙන බව ගැසට් නිවේදනයක් මගින් දන්වා ඇත. දැනටමත් දේශපාලන පක්ෂ තම අපේක්ෂකයින් තෝරා ගැනීමේ කටයුතුවල නිරත වන බව පෙනේ.
මෙම තත්ත්වය තුළ ව්යවස්ථාදායකය වන පාර්ලිමේන්තුවට බුද්ධිමත් හා හැකියාවන්ගෙන් පිරිපුන්, අවංක,හා ජනතා සුභසාධනය ඉදිරියට ගෙන යා හැකි අපේක්ෂකයින් පමණක් ඉදිරිපත් කරන ලෙස සියලු දේශපාලන පක්ෂවලින් හා ස්වාධීන කණ්ඩායම්වලින් ඉල්ලා සිටීමට 2024 සැප්තැම්බර් 28 වන දින පැවති ශ්රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි මධ්යම උපදේශක සභා රැස්වීමේදී තීරණය කරන ලදී.
තවද, අපේක්ෂකයින්ට තිබිය යුතු අවම සුදුසුකම් පිළිබඳව ජමාඅත් ඇතුළු සමාජයීය හා ආගමික සංවිධාන විසින් කලින් සකස් කරන ලද ලේඛනය, රටේ ක්රියාත්මක වන සියලු ප්රජාවන් නියෝජනය කරන සිවිල් සංවිධාන වෙනුවෙන් ජනාධිපති ඇතුළු පක්ෂ නායකයින්ට භාර දීමට පියවර ගෙන ඇති අතර, මෙම උත්සාහයට ශ්රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි තව දුරටත් තම සම්පූර්ණ සහාය ලබා දීමටත් තීරණය කරන ලදී.
දේශපාලන පක්ෂ සහ ස්වාධීන කණ්ඩායම් විසින් ඉදිරිපත් කරනු ලබන අපේක්ෂකයින්ගෙන් පමණක් පාර්ලිමේන්තු නියෝජිතයින් තෝරා ගැනීමට ජනතාවට සිදුවන බැවින්, ඉහත සඳහන් මාර්ගෝපදේශයට අනුකූලව සුදුසුකම් ලත්, ගුණාත්මක අපේක්ෂකයින් ඉදිරිපත් කිරීමේ වගකීම දේශපාලන පක්ෂ සහ ස්වාධීන කණ්ඩායම්වල නායකත්වයට තිබිය යුතුය. සියලු දේශපාලන පක්ෂ සහ ස්වාධීන කණ්ඩායම් මෙම කරුණ සම්බන්ධයෙන් වගකීමෙන් කටයුතු කරන ලෙස සභාව අපේක්ෂා කරයි..
ප්රචණ්ඩත්වයෙන් තොර, රාජ්ය දේපළ අවභාවිතා නොකරන, නිදහස් සහ සාධාරණ මහ මැතිවරණයක් පැවැත්වීම සඳහා රජයට සම්පූර්ණ කැපවීමෙන් යුතු සහයෝගය ලබාදීම ජමාආතයේ අපේක්ෂාවයි.
තවද, ඉදිරි මහ මැතිවරණය තුළින් සුදුසු නියෝජිතයින් පාර්ලිමේන්තුවට තෝරා පත් කර යැවීමට සියලු ශ්රී ලාංකිකයින් වගකීමෙන් කටයුතු කරන ලෙසට ශ්රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි ඉල්ලා සිටින අතර, ජමාඅතේ ව්යවස්ථාවට අනුව ජමාඅත් කිසිදු දේශපාලන පක්ෂයකට හෝ ස්වාධීන කණ්ඩායමකට පක්ෂව හෝ විරුද්ධව ක්රියා නොකරන බවත්; රටේ හා ජනතාවගේ යහපත වෙනුවෙන් සියලු පාර්ශ්වයන් සමඟ සහයෝගයෙන් කටයුතු කිරීමට ජමාඅත් සැමවිටම සූදානම් බවත් අවධාරණය කරන ලදී.
තවද, ජමාඅත් සාමාජිකයන්ට මැතිවරණයේදී අපේක්ෂකයින් ලෙස තරඟ කල නොහැකි බවටත්; කිසිදු දේශපාලන පක්ෂයකට හෝ අපේක්ෂකයෙකුට පක්ෂව හෝ විරුද්ධව මැතිවරණ ව්යාපාරවල නිරත විය නොහැකි බවටත්; දේශපාලන රැස්වීම්වලට සහභාගී විය හැකි බවටත්; තමන් කැමති අපේක්ෂකයින්ට ඡන්දය දිය හැකි බවටත් ගෙන ඇති ජමාඅතයේ ස්ථාවරය මධ්යම උපදේශක සභාව නැවත වරක් තහවුරු කළේය.
මාධ්ය අංශය,
ශ්රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි
29. 09. 2024