Shirdi Sai baba

Shirdi Sai baba Om sairam Shri Sai Baba's life and teachings are well documented in Sai Satcharitra by Shri Hemadpant in Marathi which was personally blessed by Shri Sai Baba.
(3)

Shri Hemadpant got Shri Sai Baba's blessings in 1910 to write this work. Said Shri Sai Baba "Let him make a collection of stories and experiences, keep notes and memos; I will help him. He is only an outward instrument." Subsequently SaiSatcharitra has been translated into a number of different languages. The one in English is called Shri Sai Satcharitra by Shri Nagesh Vasudev Gunaji. The followin

g is a very short summary on the life of Shri Sai Baba to serve as an introduction. We recommend that you read one of the more authoritative books to really understand the life and teachings of Shri Sai Baba. Chandbhai, the headman of a village called Dhoopkhede (in Aurangabad, India), once lost his horse and was looking for it. Suddenly he heard a voice say "You look tired. Come here and rest a while". He turned around and saw a young Fakir (Baba). The fakir smiled at him and said "What are you looking for in this jungle, Chandbhai". This surprised Chandbhai and he wondered how the fakir knew his name. Slowly, he said "I have lost my horse. I have looked for it everywhere, but cannot seem to find it". The fakir told him to look behind a clump of trees. Chandbhai was pleasently surprised to find his horse grazing peacefully behind those trees. He thanked the fakir and asked his name. The fakir said "some people call me Sai Baba." Sai Baba then invited Chandbhai to have a smoke with him. He got the pipe ready, but there was no fire to light it with. Sai Baba thrust a pair of tongs into the ground and brought out a burning coal. Chandbhai was wonderstruck. He thought "this is no ordinary person" and invited Baba to come to his house and be his guest for a few days. Next day Baba went to Chandbhai's house and found everybody in a very joyful mood and festivities going on all around. He found that Chanbhai's wife's nephew was getting married. The bride was from Shirdi and the marriage party was going to Shirdi. Chandbhai invited Baba to accompany the marriage party to Shirdi. At Shirdi they camped in a field next to Khandoba's temple. After the wedding, Saibaba stayed on at Shirdi. At first he lived under a neem tree and begged for food whenever he needed it. He then went to Khandoba's temple, intending to stay there, but the temple priest met him at the entrance and told him to go to the mosque. That is how Baba, started staying at the Mosque which was later called Dwarkamayi. Baba preached at Shirdi all his life and performed numerous miracles to convince people that God exists. He healed people's diseases, provided moral and material comfort to his Devotees. Baba helped bring Unity and Harmony between all communities. He said that God is one, but called by different names. He said follow your own religion and seek the truth. One day a rich millionaire named B***y came to Sai Baba and said he was going to construct a stone building for Shri Krishna. Baba helped him plan the building. Before the building was completed Baba fell very ill. On the 15th of October 1918, he breathed his last. His last wish was to be buried in B***y's building. B***y's stone building came to be known as Samadhi Mandir. Shri Sai Baba was buried here and a beautiful shrine was built over it. To this day, people flock to Shirdi to pay homage to Shri Sai Baba.

24/10/2019
Shirdi Dharsan on 23-07-2018
24/07/2018

Shirdi Dharsan on 23-07-2018

15/04/2018
07/04/2018

Unless there is some relationship or connection, nobody goes anywhere. If any men or creatures come to you, do not discourteously drive them away, but receive them well and treat them with due respect. Shri Hari (God) will be certainly pleased if you give water to the thirsty, bread to the hungry, clothes to the naked and your verandah to strangers for sitting and resting. If anybody wants any money from you and you are not inclined to give, do not give, but do not bark at him like a dog. - Shirdi Sai Baba

31/03/2018

#அனைத்தும்_அறிவேன்

🕉 ஒருமுறை தாமோதர் சந்தானே குடும்பத்தினர் பாபாவை தரிசனம் செய்ய ஷீரடிக்கு சென்றனர். அந்த பயணத்தின் போது அவரது மனைவியின் மூக்குத்தி வழி தவறி துளைந்து போனது. அவரது மனைவி அதை எல்லாம் பெருட்படுத்தவில்லை ,ஆனாலும் மூக்குத்தி கிடைத்தால் பரவாயில்லை என்று மனதிற்க்குள் நினைத்தபடியே பயணம் செய்தாள்.

📌அவர்கள் குழந்தை வரம் வேண்டி பாபாவை தரிசனம் செய்ய ஷீரடிக்கு வந்தனர். பின்னர் துவாரகமாய்க்கு சென்று பாபாவை தரிசனம் செய்துவிட்டு ,பாபாவின் முன்பு நீண்ட நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தனர். பாபாவும் அவர்களை எதற்காக வந்தார்கள் என்று கேட்கவில்லை.

📍பிறகு பாபா அவர்களுக்கு ஒரு தேங்காயை அளித்து அதை சாப்பிட சொன்னார். அதை பெற்று கொண்டு அவர்களது அறைக்கு சென்று அந்த தேங்காயை சாப்பிடவதற்க்காக உடைத்தனர் . அந்த தேங்காயின் உள்ளே அவரது மனைவியின் துளைந்து போன மூக்குத்தி இருந்தது , அதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர் . உடனே உற்சாகமாக அந்த தேங்காயை அறைக்குள் வைத்துவிட்டு ,மூக்குத்தியை மட்டும் எடுத்து கொண்டு பாபாவிடம் ஓடி சென்றனர்.

📌 பாபா அவர்களை பார்த்து கூச்சலிட்டார் ,
"" இருவரும் இங்கு வந்து அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள் ,எனக்கு தெரியாதா !! உங்களுக்கு சந்ததி இல்லை என்றும் மற்றும் உங்கள் மூக்குத்தி துளைந்து போனதையும் நான் அறிவேன். அதனால் தான் இரண்டிற்க்கும் தேங்காயை ஆசிர்வதித்து அளித்தேன் , அதனால் உங்களுக்கு மூக்குத்தி கிடைத்தது , ஆனால் நீங்கள் தேங்காயை அறையில் வைத்துவிட்டு வந்துவிட்டீர்கள். உடனே இருவரும் அறைக்கு சென்று தோங்காயை சாப்பிடுங்கள் .அப்பொழுதுதான் உங்கள் பிரச்சினைகள் முழுவதுமாக முடிவுக்கு வரும் """ என்றார் .

📍பின்னர் எட்டாவது நாள் பாபா அவர்களுக்கு செல்வதற்கு அனுமதி அளித்தார். அப்பொழுது பாபா அவர்களை பார்த்து கூச்சலிட்டார்,
""இப்பொழுது வீட்டிற்கு செல் , ஆனால் ஷீர்டிக்கு மீண்டும் வர வேண்டாம் ! "" என்றார்.

📌அதைகேட்டு தாமோதர் ஆச்சரியம் அடைந்து ,கனமான இதயத்துடன் பாபா ஏன் ஷீரடிக்கு இனி வர வேண்டாம் என்று சொல்கிறார் என்று நினைத்தார்.

📍உடனே தாமோதர் பாபாவிடம் ,
"" எல்லாம் சரி , நான் இனி வரவில்லை ஆனால் நான் செல்லும் முன்பு எனக்கு உங்களது அபரிமிதமான ஆசீர்வாதத்தை அளியுங்கள் "" என்றார்.
📌 அதற்கு பாபா ,
"" அரே !! நீ போன பின்பும் நான் உன்னை பார்த்துக்கொள்வேன் , உங்கள் முழு வம்சாவளி வரிசையை முழுவதும் நான் அறிவேன் . நீயும் நானும் பல கடந்த முற்பிறவியில் ஒன்றாக இருக்கிறோம். "" என்றார் .

📍 பின்னர் பாபா அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் கை நிறைய உதி அளித்து ஆசீர்வதித்தார். பின்பு அவர்கள் வீடு திரும்பினர்🕉

🎉➡ பகிருங்கள் பக்தர்களே ♻

Om Sairam
04/01/2018

Om Sairam

08/09/2017

நான் சாய் பாபா கோவிலுக்குப் போகமுடியவில்லை. நேரமே கிடைக்கவில்லை, பாபா மன்னித்துவிடுங்கள். என்று வேண்டுகிற ரகமா நீங்கள்?

எந்த வேலையிருந்தாலும் கோயிலுக்குப் போவதை நிறுத்த மாட்டேன் என்கிறவரா, நீங்கள்?

பாபா, பாபா என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன தவிர, அவரை பூஜிப்பதிலோ, அவரது கோவிலுக்குச் செல்வதிலோ எனக்கு ஆர்வம் வருவதில்லை என்கிறவரா நீங்கள்?

நீங்கள் எப்படிப் பட்டவராக இருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்..
உங்களுக்கு எது சுலபமாக இருக்கிறதோ அந்த வழியில் பாபாவை வணங்கினால் போதும். கோவிலுக்குப் போனால் நல்லது. போகவில்லை, வீட்டில் அவரது பாடலைக் கேட்டபடி வேலை செய்து கொண்டிருந்தேன், சத்சரித்திரத்தை சி.டி போட்டு கேட்டுக் கொண்டிருந்தேன். டி.வி யில் நேரடியாக ஆரத்தி பார்த்துக் கொண்டிருந்தேன் என எப்படி அவரை நினைத்தாலும் அவரை வழிபட்டதுதான். - ஶ்ரீ சாயி-யின் குரல்.

11/07/2017

அன்புக் குழந்தையே!
பொறுக்க முடியாத அவதியும் அதையொட்டி உன் மனதில் எழுகின்ற கோணல் சிந்தனைகளும் உயிரை மாய்த்துக்கொள்ள நினைக்கும் எண்ணமும் என்னை மனவருத்தமடைய செய்கின்றன. உனது துக்க குப்பைகளை மூட்டைகட்டி தூர போட்டுவிட்டு எனது பாதங்களை பற்றிக்கொள். நான் அனைவருக்கும் கருணைமயமான அன்னை என்பதையும் ஒரே ஒரு முறை கூவி அழைத்தாலும் ஓடி வந்து அணைத்து உச்சி முகரும் தாய் என்பதையும் மறந்துவிடாதே. உனக்கு என்ன தேவை என்பதை நான் முற்றிலும் நினைவில் வைத்திருக்கிறேன். உன்னை துன்பச் சேற்றில் மூழ்கிவிட ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன். உனது துக்கம் நிச்சயமாகவே மகிழ்ச்சியாக மாறும். உனது வாழ்க்கை சீர்படும் காலம் விரைவில் வரும். இதற்கு முன்னால் நீ கடந்துவந்த கடினமான பாதைகளை சற்று நினைத்துப் பார் அதிலெல்லாம் உன்னைத் தூக்கி சுமந்து காப்பாற்றி வந்தேன்.இனியும் அப்படியே உன்னை காப்பாற்றுவேன். உனக்குச் சோதனையாக தெரிகிற இந்த காலத்தை மனதில் வைத்துக்கொள்ளாதே. எனது அற்புதங்கள் இனி உன் வாழ்வில் நிகழ்வதற்காக ஏற்பட்டுள்ள ஒரு வழிதான் இந்த சோதனைகள். வாழ்க்கையில் சலிப்பும் வெறுப்பும் கொள்ளாதே. மனம் புண்ணாகி போனதே என வருந்தாதே .. இதோ என் மென்மையான கரங்களால் உன்னை வருடிக்கொண்டு உன் பக்கத்தில் தான் நான் உனக்காக இருக்கிறேன். மிக விரைவில் உன்னை பொன்னாக்கும் நாள் வந்துகொண்டிருக்கிறது.......................சாயியின் குரல்

24/06/2017

பாபாவுக்கு பக்தியுடன் சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள். அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும், சாதகருக்கு தீமையே விளையும். தேவை என்னவென்றால், பாபாவின் மீது உறுதியான விசுவாசமே.மேலும், சிஷ்யன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்? ஒன்றுமில்லையே! அவன் செய்வதையெல்லாம் சத்குருவன்றோ லாவகப் படுத்துகிறார்! சிஷ்யனுக்கு தனக்கு வரப்போகும் அபாயங்களை பற்றி எதுவும் தெரிவதில்லை. பாபா அந்த அபாயங்களை விலக்குவதற்காக செய்யும் உபாயங்களும் கூட சிஷ்யனுக்கு தெரிவதில்லை!மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக. - ஸ்ரீ சாயி இராமாயணம்.

ஓம் ஸ்ரீ சீரடி சாய் நாதனின் திருவடிகளே சரணம்.ஓம் சாய் ராம் — with Saiselvanathan Ar.

27/05/2017

அன்புக் குழந்தையே!
நீ படும் துயரமும், அனுபவிக்கிற மன இறுக்கமும், அழுகிற அழுகையும் என்னை பாடாய் படுத்துகிறது, இனி உன்னை அதிகமாக நேசிக்கப்போகிறேன், இதுவரை உனக்கு நடந்த கெடுபலன்களை மாற்றியமைக்கப்போகிறேன். நீ புத்திசாலியாக இருந்து உன் குடும்பத்தை கட்டி எழுப்பு, உன்னால் மட்டுமே, குடும்பத்தில் இழந்துபோன அனைத்தையும் மீட்டு வர முடியும். வீட்டிற்குள் உட்கார்ந்து வீணாக காலத்தை முடக்காமல், உன் குடும்பத்தை எப்படி எல்லாம் மீட்கலாம் என திட்டமிடு. பிறர் உன்னை கேலி பேசுகிறார்கள், குறை கூறுகிறார்கள், அவமரியாதையாக பார்க்கிறார்கள் என்றெல்லாம் கவலைபடாதே, அவர்களெல்லாம், உன் வளர்ச்சி பிடிக்காமல், மீண்டு வந்துவிடுவாய் என்ற பயத்தில் புலம்புகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு புன்சிரிப்பைத் தவிர வேறெதையும் காட்டாதே. இழப்பிலிருந்து படிப்பைக் கற்றுக் கொள். எழுந்து கால் ஊன்றி நில். உன்னால் முடியும், உன்னால் மட்டுமே முடியும். நிச்சயமாக சறுக்கலில் இருந்து மீண்டு நீ சாதிக்க போகிறாய். உன்னை இழந்தவர்களும் கைவிட்டவர்களும், கடன்கொடுத்து சுரண்டியவர்களும், கதவைச் சாத்திக்கொண்டு போனவர்களும் உன்னை பார்த்து பிரமிக்கப்போகிறார்கள். அதுவரை நான் சிறிதும் அயராது உனக்காக உழைக்கப்போகிறேன். நான் உன்னை விட்டு விலகவும் மாட்டேன் கைவிடவும் மாட்டேன்................................. சாயியின் குரல்

05/04/2017

ஓம் சாய்ராம் ! ராமநவமி தின நற்காலை வணக்கம் !!

நீங்கள் எங்கிருந்தாலும்,எதைச் செய்தாலும் அவை எல்லாவற்றையும் நான் அறிவேன். உங்களை ஆட்டுவிப்பவன் நானே...எல்லாவற்றையும் படைத்துக் காப்பவனும் நானே...உலகத்தின் ஆதாரம் நானே..எவன் என்னை மனதார நினைக்கிறானோ அவனுக்கு எப்போதும் துன்பம் நேராது"-

*ஸ்ரீ ஷீரடி சாய்பாபா*

17/03/2017

பாபா..... உங்களது தெய்வீகப் பாதங்களில் பணிகிறோம்... எங்களை எப்போதும் கைவிட்டுவிடாதீர்கள். நாங்கள் தவறு செய்தால், திருத்துங்கள். .. உதறித் தள்ளி விடாதீர்கள். எங்கள் வாழ்வின் கதிரொளிக் கீற்று நீங்கள்தான்... உங்களுடையவர்களாகக் கருதி எங்களை நேசியுங்கள். உங்களது ஒளிநிறைந்த இதயத்தில் எங்களைப் பத்திரமாக பத்திரமாக கொள்ளுங்கள.

சாய் வணக்கம்

13/03/2017

மாறாத நம்பிக்கை🙏
எந்த வித சம்பிரதாயமான பூஜை முறைகளையோ,விரதங்களையோ எனது பக்தனிடமிருந்து நான் எதிர்பார்ப்பது இல்லை.எந்த சூழ்நிலையிலும் என்மீது மாறாத நம்பிக்கை வைத்திருப்பவனையே மிகவும் நேசிக்கிறேன்.
---ஷீரடி சாய்பாபா

Om sairam
16/02/2017

Om sairam

OM SAIRAM!
பாபா என்னை எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தைரியத்துடன் காத்திருந்த உனக்கு, இப்போது நம்பிக்கை குறைந்து விட்டது. அந்த அளவுக்கு சோதனைகள் பல உன்னை சூழந்துகொண்டிருக்கின்றன. எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று உறக்கத்தை இழந்துவிட்டாய். உன்னை எல்லோரும் அவமானப்படுத்துவது போலவும், கைவிட்டது போலவும், எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாதது போலவும் எல்லோரும் இருந்தும் அனாதையை போலவும் இப்போது நீ உணருகிறாய்...
சங்கடங்களை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் இப்போது உன்னிடம் இல்லை.. இன்னும் கூட உனது சோதனைகளை, கவலைகளை என்னால் பட்டியல் போட முடியும். குழந்தையே அனைத்தையும் நான் அறிவேன், இன்னும் சற்று காலத்திற்கு இதை நீ சகிக்கத்தான் வேண்டும். அதற்காக உனது ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி தைரியமாக இரு. உனது மனம் எதிரே தெரிகிற சங்கடங்களை நினைத்து நம்பிக்கை இழக்கிற காலகட்டத்தில் தான் நீ இருக்கிறாய். இந்த சூழ்நிலை தான் உனக்கு உண்மையான சோதனைக்காலம்..
இந்த காலகட்டத்தில் தான் நீ திடமான சிந்தையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இறை நாமத்தை நீ உச்சரிக்கும் போது உன்னுடைய கர்மவினைகளின் பிடி தளருகிறது. எந்த நேரத்திலும், கஷ்டத்திலும் என் பெயரை உன் மனதில் இருத்தி எனது நாமத்தை உச்சரித்தபடி இருப்பாயானால் உனது கர்மவினைகளின் பலன் பனி போல் உருகி கரைவதை உணர்வாய்! - சாயியின் குரல்

Om sairam
16/02/2017

Om sairam

வருத்தப்படாதே🙏

வருத்தப்படாதே! அழாதே! குற்றமாகக்கருததே! தோல்வி வரும் போது துவண்டு போகாதே. துன்பத்தை பெரிதாக நினைத்து இன்பத்தை இழந்து போகாதே. உனக்கு நிறைய வாய்ப்புகளும், காலங்களும் உள்ளன. அவற்றை உனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதற்காகவே இந்த சின்னச் சறுக்கல் என்பதை உணர்ந்து புத்துணர்ச்சியோடு எழுந்து நடமாடு.
--ஸ்ரீ சாயி தரிசனம்

24/01/2017

இனிய செவ்வாய் நற்காலை வணக்கம் !!

சோதனைக் காலம் வரும்போது நீ பயப்படாதே,கலங்காதே.நான் உன் தந்தை.உன் கூடவே இருக்கிறேன்.தந்தை தன் பிள்ளைகளை கண்டித்து நடத்துவதைப் போல இறைவனான நானும் நான் நேசிக்கிறவர்களைக் கடிந்து கொண்டு நடத்துகிறேன்.இதை புரிந்து கொண்டு நடக்கும்போது நான் உன்னை பொறுப்பு எடுத்துகொள்வேன்.எதற்கும் நீ பயப்படாதிருப்பாய்.
--சாயி தரிசனம்.

18/11/2016

சிற்றெறும்பின் காலில்..
பாபா அடிக்கடி சொல்வார்: "'சிற்றெறும்பின் காலில் கட்டியிருக்கிற மணியின் ஓசையைக் கூட என்னால் கேட்கமுடியும். நீ என்ன செய்தாலும் அதை உடனே நான் பார்த்துவிடுவேன். உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நானே உடனிருந்து கவனித்துக் கொள்வேன்!" என்பார்.
நாம் செய்கிற அனைத்தையும் பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்துவிட்டால், நாம் படுகிற துன்பத்தைப் பற்றியோ, எதிர்பார்க்கிற விஷயத்தைப் பற்றியோ கவலை படமாட்டோம்.
அனைத்தையும் அவர் கண்கள் பார்க்க, அவரால் நடைபெறுகிறது என்பதை தெரிந்து அமைதியாக இருப்போம். அமைதியாக - பொறுமையாக அனைத்தையும் கவனியுங்கள். பாபா உங்களை கவனித்து வருகிறார்.

Thanks Mr.Boominathan

10/11/2016
20/10/2016

என்னைத் தஞ்சமடைந்த உன்னை எப்போதும் நிர்க்கதியாக இருக்கவிடமாட்டேன் என்பதையும்,ஒருபோதும் கைவிட மாட்டேன் என்பதையும் உறுதியாக நம்பு. உன் நம்பிக்கை வீண் போகாது. இன்னும் கொஞ்ச காலத்தில் உன் பிரச்சினைகள்,நோய், கடன், கசப்பான உறவுகள் அனைத்தும் மாறி அனைத்திலும் சுகமாக வாழ ஆரம்பிப்பாய்.

உனது மனம் குழப்பத்திலும் குற்ற உணர்ச்சியிலும் பாடுபடுகிறது . இது எவையும் உண்மை அல்ல. எல்லாம் சூழ்ச்சியிலும் கர்மாவின் கோ...
05/10/2016

உனது மனம் குழப்பத்திலும் குற்ற உணர்ச்சியிலும் பாடுபடுகிறது . இது எவையும் உண்மை அல்ல. எல்லாம் சூழ்ச்சியிலும் கர்மாவின் கோலமுமே. என் அன்பு பிள்ளை உன்னை காக்கவே இங்கிருக்கின்றேன். நீ உறங்கும் தருவாயிலும் உன் அருகிலேயே இருக்கின்றேன். சூழ்ச்சியும் கருமாவின் கோலமும் ஒரு நாள் முடிந்து போகும். அன்று நீ மனம் தெளிந்து என்னை அரவணைப்பாய் . இன்னும் சிறிது காலம் என் மடியில் இருந்தவாறு அமைதியாய் இரு. நான் பார்த்துக் கொள்கிறேன். நம் பந்தம் இந்த அகிலத்தில் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாதது..

ஓம் ஸ்ரீ சாய் ராம்.

நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இருதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். இந்த உலகின் கண் அசையும் அசைவற்ற சர்வ ஜீவராசிகளையும...
29/09/2016

நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இருதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். இந்த உலகின் கண் அசையும் அசைவற்ற சர்வ ஜீவராசிகளையும் நானே அரைவணைக்கிறேன். இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுபடுத்துபவன், ஆட்டுவிப்பவன். எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே. நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அழிப்பவனுமாம்.- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா

சாயி நம்மைக் கைவிடமாட்டார்பலவீனங்களைக் கொண்டவர்களாகவும், எவ்வித ஏற்றமும் அற்ற நாம் "பக்தி" என்றால் என்ன என்பதை அறியோம். ...
26/09/2016

சாயி நம்மைக் கைவிடமாட்டார்

பலவீனங்களைக் கொண்டவர்களாகவும், எவ்வித ஏற்றமும் அற்ற நாம் "பக்தி" என்றால் என்ன என்பதை அறியோம். ஆனால் மற்றெல்லோரும் கைவிட்ட போதிலும் சாயி நம்மைக் கைவிடமாட்டார் என்ற அளவு அறிவோம். எவர், அவர்தம் பாதாரவிந்தங்களில் சரணாகதி அடைகிறார்களோஅவர்களின் முன்னேற்றம் நிச்சயமானது. - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்

#சாயிபாபா #ஷீரடி #சாய்பாபா

என் குழந்தாய் ..!நண்பர்கள் உனக்கு ஆறுதலாக இல்லை என்பதை புரிந்துகொள். தங்கள் தேவைக்காக உன்னை அணுகி அலைந்தவர்களும் சோதனைக்...
22/09/2016

என் குழந்தாய் ..!
நண்பர்கள் உனக்கு ஆறுதலாக இல்லை என்பதை புரிந்துகொள். தங்கள் தேவைக்காக உன்னை அணுகி அலைந்தவர்களும் சோதனைக் காலத்தில் உன்னை விட்டுப் பிரிந்திருந்தார்கள் என்பதை மனதில் வை. நேரமும் உனக்கு அனுகூலமாக இல்லை. அதனால் பல வழிகளில் நீ திண்டாட வேண்டியிருந்தது. இப்போதுதான் உனக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இனி நீ விரும்பினால் உனக்கு நன்மை நடக்கும்.
என் குழந்தாய்! கடந்த காலத்தில் உனக்கு நான் செய்த நன்மைகளை பட்டியல் போட்டுப் பார். உன்னை விழுங்கி ஏப்பம் விட்டுவிடலாம் என்றிருந்த எல்லா நிலைமைகளில் இருந்தும் உன்னை விடுவிக்கும் உபாயங்களைச் செய்தேன்.
நீ என்னிடம் வேண்டி வேண்டி கேட்டுக்கொண்ட ஒரு சில முக்கிய விக்ஷயங்கள் மட்டும் தாமதித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பெறும் காலம் வெகு விரைவில் வந்துகொண்டிருக்கிறது. ஷீரடி பாபா. . #சாயிபாபா #ஷீரடி #சாய்பாபா

நானே உன் காவலன்!நான் நுழைவதற்குக் கதவேதும் தேவையில்லை. எனக்கு வடிவமோ விஸ்தீரணமோ கிடையாது. நான் எங்கும் எப்பொழுதும் நிறைந...
20/09/2016

நானே உன் காவலன்!
நான் நுழைவதற்குக் கதவேதும் தேவையில்லை. எனக்கு வடிவமோ விஸ்தீரணமோ கிடையாது. நான் எங்கும் எப்பொழுதும் நிறைந்திருக்கிறேன்.
தம்முடைய பாரத்தை என்மேல் போட்டுவிட்டு என்னுடன் ஒருவர் ஒன்றிவிட்டால், அவருடைய உலக சம்பந்தமான சகல விவகாரங்களுக்கும் நான் சூத்திரதாரியாகிறேன். ஷீரடி பாபா. . #சாயிபாபா #ஷீரடி #சாய்பாபா
Thanks Siridy Sai Baba Tamil Blessing

நீ நினைத்ததெல்லாம் நடக்கும். தொட்டது எல்லாம் துலங்கும். ஏனெனில் உன்னைக் கைப்பிடித்து நடத்திக்கொண்டு போகிறவர் உன் தந்தையா...
19/09/2016

நீ நினைத்ததெல்லாம் நடக்கும். தொட்டது எல்லாம் துலங்கும். ஏனெனில் உன்னைக் கைப்பிடித்து நடத்திக்கொண்டு போகிறவர் உன் தந்தையாகிய இந்த சாயி அல்லவா?மனதைரியத்தை இழக்காதே.
ஷீரடி பாபா. . #சாயிபாபா #ஷீரடி #சாய்பாபா
Thanks Siridy Sai Baba Tamil Blessing

என் குழந்தாய் ..!நீ என்னை கவனிக்க மறந்தாலும் நான் உன்னை எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருக்கின்றேன். உனக்கு எது மிக சிறந்...
15/09/2016

என் குழந்தாய் ..!

நீ என்னை கவனிக்க மறந்தாலும் நான் உன்னை எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருக்கின்றேன். உனக்கு எது மிக சிறந்தது மிக பொருத்தமானது என்பதை நானே உனக்கு தீர்மானித்து கொடுப்பேன். எதை பற்றியும் கவலை கொள்ளாமல். நடப்பவற்றை எதிர்கொள். எப்பொழுதும் என்னையே நினை நீ காப்பாற்றப்படுவது உறுதி.- ஷிர்டி சாய்பாபா.
#சாயிபாபா #ஷீரடி #சாய்பாபா

Address

Colombo
00400

Alerts

Be the first to know and let us send you an email when Shirdi Sai baba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shirdi Sai baba:

Share

Nearby pet stores & pet services


Other Colombo pet stores & pet services

Show All